பாரதியும் ஆங்கிலமும்

பாரதியும் ஆங்கிலமும், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பூங்கொடி பதிப்பகம், விலை 30ரூ. சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் எழுதிய நூல்கள், நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. “பாரதியும், ஆங்கிலமும்” என்ற தலைப்பில் ம.பொ.சி., எழுதிய நூலில், பாரதியார் கவிஞர் மட்டுமல்ல, பல ஆற்றல்கள் படைத்தவர் என்பதை விளக்குகிறார். இந்நூல் விலை 30ரூ. “மொழிச் சிக்கலும், மாநில சுயாட்சியும்” என்ற நூலில் மாநில சுயாட்சியின் அவசியத்தை வலிமை மிக்க சொற்களால் வலியுறுத்தி உள்ளார். நூல் விலை 35ரூ. சுதந்திரப் போராட்டத்தின்போது, பங்கிம் சந்திரரால் இயற்றப்பட்ட […]

Read more

மனப்பலகை

மனப்பலகை, பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மொத்தம் 31 சிறுகதைகள் கொண்ட புத்தகம். “எழுதுவதை புதுமையாக எழுத வேண்டும்” என்ற ஆசிரியரின் எண்ணம் கதைகளில் பிரதிபலிக்கிறது. கதைகள் ரத்தினச் சுருக்கமாக அமைந்துள்ளன. “காலமாகிப்போன கணவருக்கு மனைவி எழுதும் கடிதம்” மனதைத் தொடுகிறது. சில கவிதைகளை புதுக்கவிதை பாணியில் எழுதியிருப்பதை ‘புதுமை’ என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால் “வாழ்க்கை ஒரு தீராநதி”யில், சிவாஜிகணேசன், இளையராஜா, கண்ணதாசன், சுஜாதா, ஜெயகாந்தன் முதலிய சாதனையாளர்களைப் பற்றி தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். அதை சிறுகதை என்று […]

Read more

வடலூர் வாய்மொழி

வடலூர் வாய்மொழி, சாமி சிதம்பரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. To buy this Tami book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-8.html பேரறிஞர் சாமி சிதம்பரனார், பல சிறந்த ஆய்வு நூல்களையும், இலக்கிய சமய நூல்களையும் ஏறத்தாழ 60 நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்துள்ள மூதறிஞர். இந்நூல் 1959ல் எழுதி வெளிவந்த  நூல். ராமலிங்கர் வரலாறு எனத் துவங்கி 41 அத்தியாயங்களில் உண்மைக்கு வெற்றி என்ற தலைப்போடு நூல் நிறைவடைகிறது. வடலூர் வள்ளற் பெருமான் பாடல் வரிகள் மேற்கோள்களோடு, ராமலிங்கரது கொள்கைகளையும், […]

Read more

கல்கியின் சிறுகதைகள்

கல்கியின் சிறுகதைகள், நக்கீரன், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை மூன்று புத்தகங்களும் முறையே 100ரூ, 120ரூ, 130ரூ. சரித்திரக் கதைகள் எழுதுவதில் ஈடுஇணையற்றவராகத் திகழ்ந்த கல்கி சிறுகதைகள் எழுதுவதிலும் வல்லவராக விளங்கினார். காதல், வீரம், சோகம், நகைச்சுவை… இப்படி நவரசங்களும் கலந்தவை அவருடைய சிறுகதைகள். கல்கியின் மிகச்சிறந்த 55 கதைகளை தேர்ந்தெடுத்து 3 புத்தகங்களாக வெளியிட்டுள்ளது நக்கீரன். கல்கியின் மிகப் பிரபலமான வீணை பவானி, திருவழுந்தூர் சிவக்கொழுந்து, கேதாரியின் தாயார், அமரவாழ்வு, பொங்குமாங்கடல், புவிராஜா, சுபத்திரையின் சகோதரன் ஆகிய கதைகளும் […]

Read more

பரிசு பெறாத பாரதி பாடல்

பரிசு பெறாத பாரதி பாடல், செ. திவான், சுகைனா பதிப்பகம், 106, எப்/4ஏ, திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627002, பக்கங்கள் 106, விலை 60ரூ- செந்தமிழ் நாடென்னும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே. எனும் பாடல் தமிழ் மக்கள் அனைவரும் நன்கறிந்த பாடலாகும் என்றாலும், பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு பாடல் போட்டியில் இந்த பாடல் பரிசுபெறத் தவறிவிட்டது. பரிசுபெற தவறிவிட்ட பாரதியின் பாடல், எந்த சூழ்நிலையில் அந்த போட்டி நிகழ்ந்தது, அந்த போட்டியில் கலந்துகொண்டவர்கள் […]

Read more

வ.உ.சி. பற்றி ம.பொ.சி.

வ.உ.சி. பற்றி ம.பொ.சி., சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், தொகுத்தவர்- ம.பொ.சி. மாதவி பாஸ்கரன், சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி. பதிப்பகம், பதிவு எண் 482/2010, 4/344 ஏ, சீஷெல் அவென்யூ, அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை – 41, பக்கம் 97, விலை 65 ரூ. வ.உ.சி. யை என் அரசியல் தந்தை என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பெருமைபடக் கூறுவார். அவர் எத்தனையோ நூல்களை எழுதியிருந்தாலும், முதன் முதலில் எழுதி வெளியிட்ட நூல், கப்பலோட்டிய தமிழர் என்பதுதான். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அதற்காக […]

Read more