கல்கியின் சிறுகதைகள்
கல்கியின் சிறுகதைகள், நக்கீரன், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை மூன்று புத்தகங்களும் முறையே 100ரூ, 120ரூ, 130ரூ.
சரித்திரக் கதைகள் எழுதுவதில் ஈடுஇணையற்றவராகத் திகழ்ந்த கல்கி சிறுகதைகள் எழுதுவதிலும் வல்லவராக விளங்கினார். காதல், வீரம், சோகம், நகைச்சுவை… இப்படி நவரசங்களும் கலந்தவை அவருடைய சிறுகதைகள். கல்கியின் மிகச்சிறந்த 55 கதைகளை தேர்ந்தெடுத்து 3 புத்தகங்களாக வெளியிட்டுள்ளது நக்கீரன். கல்கியின் மிகப் பிரபலமான வீணை பவானி, திருவழுந்தூர் சிவக்கொழுந்து, கேதாரியின் தாயார், அமரவாழ்வு, பொங்குமாங்கடல், புவிராஜா, சுபத்திரையின் சகோதரன் ஆகிய கதைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. கல்கியின் கதைகள் எத்தனைமுறை படித்தாலும் சலிக்காதவை. எக்காலத்துக்கும் ஏற்றவை.
—
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, சிலம்புச் செல்வர். ம.பொ.சிவஞானம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-040-0.html
சிலம்புச் செல்வர். ம.பொ.சிவஞானம் எழுதிய புகழ் பெற்ற புத்தகம். புதிய கட்டமைப்புடன் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
—-
அறவாணன் வரலாறு, வே. திருநாவுக்கரசு, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 50ரூ.
தமிழறிஞரும் முன்னாள் துணைவேந்தருமான க.ப.அறவாணன் 100 புத்தகங்களுக்கு மேல் எழுதிய சாதனையாளர். எழுத்திலும், பேச்சிலும் தமிழின் பெருமையை முழங்கி வருகிறார். அவருடைய வரலாற்றையும், சாதனைகளையும் விளக்கி, அறிஞர் அறவாணன் என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார் அவருடைய மாணவனான சே. திருநாவுக்கரசு. தமிழுணர்வைத் தூண்டும் விதத்தில் கட்டுரைகளை அழகாக எழுதியுள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 8/2/2012.