தமிழ்நேயம்
தமிழ்நேயம், கோவை ஞானி, புதுப்புனல், பாத்திமா டவர், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 5, பக். 256, விலை 200ரூ.
கோவை ஞானி தாம் நடத்தி வந்த தமிழ்நேயம் இதழில் தமிழர் தொடர்பான அனைத்துநிகழ்வுகளையும் புதிய கண்ணோட்டத்தில் கண்டித்தும், பாராட்டியும் பதிவு செய்துவந்தார். அரசியல் லாபத்துக்காக நிகழ்ந்த துரோகங்கள், அணுமின் திட்டத்தின் மீது அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், கும்பகோணம் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த உலக வாழ்க்கை மறுக்கப்பட்டது, நாடாளுமன்றத்தை முடக்கி மக்கள் பணத்தை வீணாக்கும் அரசியல்வாதிகளின் துடிப்பு என்று உலக நடப்புகள் அனைத்தையும் பதிவு செய்துள்ளார். அதன் தொகுப்பே இந்த நூல். நாகரிகம் என்பது தமிழர்களிடையே குறிப்பாக ஈழத் தமிழர்களிடையே இடைவிடாத போராட்டங்களுக்கு இடையிலும் இழையோடி இருப்பதையும் விடாமல் பதிவு செய்துள்ளார். கோவை ஞானி பதிவு செய்திருக்கும் நிகழ்வுகள் பலவும் படிக்கப்படிக்க நம்மை அதிரச்செய்கின்றன. நன்றி: குமுதம், 15/5/2013.
—-
இரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டுவலி, முதுகுவலி, சுகப்பிரசவம் உண்டாக சுகமான யோக நெறிகள், யோகக் கலைமாமணி பி. கிருஷ்ணன் பாலாஜி, ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி தியானத்திருக்கோயில், 37, காமாட்சி அம்மன் நகர், அனெக், மாங்காடு, சென்னை 122, ஒவ்வொரு புத்தகமும் 50ரூ.
மேற்படி பிரச்சினைகள் தீர உதவும் யோக முறைகளை தனித்தனி புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். மேற்படி பிரச்சினைகள் வருவதற்கான காரணங்களையும், உணவு முறைகள் என சில துணுக்குகளையும் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி 8/5/2013.