நடிகைகளின் கதை

நடிகைகளின் கதை, ஆர்.டி.எ(க்)ஸ், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 125ரூ. புதுமுக நடிகைகள், சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெறவும், புகழ் பெறவும் எத்தனை பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டி இருக்கிறது? எத்தனை பேரிடம் ஏமாற வேண்டி இருக்கிறது? எத்தனை பேரை திருப்திபடுத்த வேண்டி இருக்கிறது? உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் கொடுக்கப்படவில்லை. ஊகித்துக் கொள்ளும்படி குளு கொடுத்திருக்கிறார்கள். சினிமாவின் மறுபக்கத்தைப் படம் பிடித்துக் காட்டும் புத்தகம்.   —- தன்னம்பிக்கை ஒரு […]

Read more

தமிழ்நேயம்

தமிழ்நேயம், கோவை ஞானி, புதுப்புனல், பாத்திமா டவர், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 5, பக். 256, விலை 200ரூ. கோவை ஞானி தாம் நடத்தி வந்த தமிழ்நேயம் இதழில் தமிழர் தொடர்பான அனைத்துநிகழ்வுகளையும் புதிய கண்ணோட்டத்தில் கண்டித்தும், பாராட்டியும் பதிவு  செய்துவந்தார். அரசியல் லாபத்துக்காக நிகழ்ந்த துரோகங்கள், அணுமின் திட்டத்தின் மீது அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், கும்பகோணம் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த உலக வாழ்க்கை மறுக்கப்பட்டது, நாடாளுமன்றத்தை முடக்கி மக்கள் பணத்தை வீணாக்கும் அரசியல்வாதிகளின் துடிப்பு என்று உலக நடப்புகள் அனைத்தையும் பதிவு செய்துள்ளார். அதன் தொகுப்பே இந்த நூல். […]

Read more