நடிகைகளின் கதை
நடிகைகளின் கதை, ஆர்.டி.எ(க்)ஸ், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 125ரூ.
புதுமுக நடிகைகள், சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெறவும், புகழ் பெறவும் எத்தனை பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டி இருக்கிறது? எத்தனை பேரிடம் ஏமாற வேண்டி இருக்கிறது? எத்தனை பேரை திருப்திபடுத்த வேண்டி இருக்கிறது? உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் கொடுக்கப்படவில்லை. ஊகித்துக் கொள்ளும்படி குளு கொடுத்திருக்கிறார்கள். சினிமாவின் மறுபக்கத்தைப் படம் பிடித்துக் காட்டும் புத்தகம்.
—-
தன்னம்பிக்கை ஒரு மூலதனம், அகநம்பி, இயற்கை சக்தி பப்ளிகேஷன்ஸ், புன்னமை கீரமம், சீவடி அஞ்சல், காஞ்சீபுரம் மாவட்டம், விலை 75ரூ.
தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். வெற்றி பெறலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் நூல். இளைய தலைமுறையினருக்குப் பயனுள்ள பல யோசனைகளை கூறியுள்ளார் நூலாசிரியர். 3 மாதங்களே பள்ளிக்குச் சென்ற தாமஸ் ஆல்வா எடிசன் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, மின்சார பல்பு, சினிமா கேமரா, கிராமபோன் முதலிய பொருளைக் கண்டுபிடித்ததையும், வலிப்பு நோய் உள்ள அலெக்சாண்டர், பல நாடுகளை வென்று மாவீரர் என்று புகழ் பெற்றதையும் எடுத்துக் கூறி, வாழ்க்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு தடையல்ல என்று உணர்த்துகிறார். பயனுள்ள புத்தகம்.
—-
ஸ்ரீபதஞ்சலி மஹரிஷியின் அஷ்டாங்க யோகக் கலைகள், யோகக் கலைமாமணி பி. கிருஷ்ணன் பாலாஜி, ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி யோகப் பயிற்சி மையம், பிளாட் எண் 37, காமாட்சியம்மன் நகர், அனெக்ஸ், மாங்காடு, சென்னை 122, விலை 100ரூ.
நீரழிவு, ஆஸ்துமா, ரத்த அழுத்தம், உடல் எடை குறைப்பு போன்ற உடல் கோளாறுகளை தீர்க்கும் யோகப்பயிற்சி பற்றிய விளக்கங்கள் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 10/10/2012.