வடலிமரம்

வடலிமரம், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோயில், பக். 124, விலை 80ரூ. விடலைப் பருவத்தில் வரும் காதல், உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் இதில் வரும் அனந்தகிருஷ்ணன் சொர்ணா காதல் கவர்ச்சியைத் தாண்டிய காதலாக நம்முன் நிற்கிறது. பனைமரத்தில் வடலி மரம் என்பது விடலைப் பருவத்தைப் போன்றது. அந்தப் பருவத்தில் பனைமரத்தில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி யதார்த்தமானதாய் இருக்குமோ, அதைப்போலவே இவர்கள் காதலும், காதலைத் தாண்டிய நிஜவாழ்வும், சாதி ஆதிக்கமும், பண அதிகாரமும் அதற்கு எப்படியான எதிர்ப்பைக் காட்டும் என்பதும் நாவலில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. […]

Read more

தமிழ்நேயம்

தமிழ்நேயம், கோவை ஞானி, புதுப்புனல், பாத்திமா டவர், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 5, பக். 256, விலை 200ரூ. கோவை ஞானி தாம் நடத்தி வந்த தமிழ்நேயம் இதழில் தமிழர் தொடர்பான அனைத்துநிகழ்வுகளையும் புதிய கண்ணோட்டத்தில் கண்டித்தும், பாராட்டியும் பதிவு  செய்துவந்தார். அரசியல் லாபத்துக்காக நிகழ்ந்த துரோகங்கள், அணுமின் திட்டத்தின் மீது அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், கும்பகோணம் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த உலக வாழ்க்கை மறுக்கப்பட்டது, நாடாளுமன்றத்தை முடக்கி மக்கள் பணத்தை வீணாக்கும் அரசியல்வாதிகளின் துடிப்பு என்று உலக நடப்புகள் அனைத்தையும் பதிவு செய்துள்ளார். அதன் தொகுப்பே இந்த நூல். […]

Read more