சுவாமி விவேகானந்தர் (விரிவான வாழ்க்கை வரலாறு)
சுவாமி விவேகானந்தர் (விரிவான வாழ்க்கை வரலாறு), சுவாமி ஆகதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 754+69, தொகுதி 1-220ரூ, தொகுதி 2-200ரூ.
சுவாமி விவேகானந்தரின் வரலாறு தமிழில் விரிவாக வரவேண்டும் என்ற எண்ணற்றோரின் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்நூல் வந்துள்ளது. இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்கள். மகாசமுத்திரத்திற்கு இணையான சுவாமிஜியின் வரலாற்றை இந்த இரணடு தொகுதிகளுக்குள் அடக்க முடியாதுதான் என்றாலும் விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளுக்கும் அவரது கருத்துககளுக்கும் இந்நூலில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால் படிப்போர்க்கு மன நிறைவைத் தருகின்றன. அவரது இளமைப்பருவம், அவர் எங்கெங்கு சென்றார், யார் யாருடன் பழகினார், அவரது பயணப்பாதை, காலம், இடம், உடன் இருந்தவர்கள் என்று ஒன்றுவிடாமல் நூலாக்கம் பெற்றுள்ளது சிறப்பு. சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள் தேவைப்படும் காலகட்டம் இது. அதனால் முன்னைவிட இப்போது அவரது வரலாற்றைத் தேடிப்பிடித்து படித்து வருகின்றனர். உலகின் விடியலுக்காக எழுந்த ஆன்மிகச் சூரியனை இந்நூலின் வழி எழுந்தருள வைத்துள்ளார்கள்.
—-
வீணையின் குரல், விக்ரம் சம்பத், தமிழில் வீயெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக். 440, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html
வீணை பாலசந்தருக்கு முன் பலர் வீணை இசையில் பாண்டித்தியம் மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் உலக அரங்கில் வீணையின் புகழை இவர் அளவிற்குப் பரப்பியவர் இல்லை என்பதே இசை வரலாற்று உண்மை. திரைப்படத்துறையில் இரவது முத்திரை, அதன் வளர்ச்சிக்கு உதவியது. மனதிற்குப் பட்டதைச் சொல்லிவிடும் இயல்பு பாலசந்தருக்கு உண்டு.அதனால் அவர் சர்ச்சையின் நாயகன் என்றே இசை உலகினரால் விமர்சிக்கப்பட்டார். அதற்காக அவர் கவலைப்பட்டதில்லை. பிறப்பு தொடங்கி இறுதிக்காலம் முடிய பாலச்சந்தர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களும் தகவல்களும் எதையும் விடாமல் விவரிக்கும் நூல் இது. இசைப் பிரியர்களுக்கு ஒரு கோணத்தையும் இசை ஆய்வாளர்களுக்கு இன்னொரு கோணத்தையும் தரும் நூல். நன்றி: குமுதம், 27/3/13.