மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம்

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம், டி.ஆர்.குப்புசாமி, ஆர்என்ஆர் பிரிண்டர்ஸ், 19, தாண்டவராயன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 350ரூ.

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை திரட்டி எடுத்து எளிதாக தந்துள்ளார் ஆசிரியர். மிக எளிய நடையில் அமைந்திருப்பதால் அனைவரும் படித்து பயன்பெறலாம். பெரும்பாலானவர்கள் அறிந்திராத நுண்ணிய செய்திகள் பல நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.  

—-

 

வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு, பேராசிரியர் அர. வெங்கடாசலம், ஏ19, வாஸ்வனி வெல்லா விஸ்டா, கிராபைட் இந்தியா ஜங்ஷன், பெங்களூரு-48, விலை 85ரூ.

புதிய புதிய உவமைகளைக் கையாண்டு உளவியல் நோக்கில் கருத்துகளை தெரிவித்துள்ளார். படிப்பதற்கு வித்தியாசமாக உள்ளது. சில குறள்களுக்கு இதுவரை கூறப்படாத புது விளக்கங்களைத் தருகிறார். நன்றி: தினத்தந்தி, 21/8/2013.  

—-

 

க்ரைம்/காதல் கதைகள் தொகுதி 1, புஷ்பா தங்கதுரை, ரம்யா பதிப்பகம், பக். 512, விலை 160ரூ.

என்றாவது வருவாய், 45 கிலோ சொர்க்கம், காணாமல் போன விமானம் என்று மூன்ற நாவல்களின் தொகுதி இந்த நூல். முதல் நாவல், தான் செய்யாத குற்றங்களுக்குத் தவறாகத் தேடப்படும் கதாநாயகனின் ஓட்டம், தாவல், காதல், இறுதியில் வெளிநாட்டுக்கு அபின் கடத்தப்படுவதைக் கண்டுபிடித்தல் என்று, கன்கார்டு வேகத்தில் செல்கிறது. இரண்டாவது, மெல்லிதாய் உளவியலைத் தொட்டுச் சின்ன சஸ்பென்ஸ் முடிவுடன் எழுதப்பட்டிருக்கிறது. மூன்றாவது பல்லாண்டுகளுக்கு முன், காணாமல் போன ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானத்தை அடிப்படையாய் வைத்து, பின்னப்பட்ட திகில் கதை. மூன்று நாவல்களுமே, சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கின்றன. -கே.சி. நன்றி: தினமலர், 28/7/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *