சோழர் செப்பேடுகள்
சோழர் செப்பேடுகள், நடன. காசி நாதன், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-515-8.html
சோழப் பேரரசர்களான சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடு அவரது மைந்தன் முதலாம் ராஜராஜனின் பெரிய லெயிடன் செப்பேடு, அவரது மகன் முதலாம் ராஜேந்திரனின் கரந்தைச் செப்பேடு, அவரது மகன்களில் ஒருவரான வீரராஜேந்திரனின் மகள் வயிற்றுப் பெயரனான முதலாம் குலோத்துங்கனின் சிறிய லெயிடன் செப்பேடு ஆகிய செப்பேடுகளின் தமிழ்ப் பகுதிகளின் மூலம் அடங்கிய நூல் இது. மேலும் முதலாம் ராஜாதிராஜன் காலத்திய திருஇந்தளூர்ச் செப்பேடுகள் குறித்த சிறுகுறிப்புகள் (மூலம் இல்லாமல்) சேர்க்கப்பட்டுள்ளன. சில செப்பேடுகள், முத்திரைச் சின்னங்களின் புகைப்படங்கள் நூலில் இணைக்கப்பட்டுள்ளன. செப்பேடுகளின் மூலம் மட்டுமே உள்ளதால் எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வது சற்று கடினம். இத்துறையில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடுவோருக்கு பேருருதவி புரியும் நூல்.
—-
முமுட்சுப்படி, மாருதிதாஸன், நர்மதா பதிப்பகம், சென்னை 17, பக். 320, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-636-8.html
முமுட்சு என்றால் மோட்சத்தை அடைய விரும்புபவன் என்று பொருள். மோட்சத்தை அடைய விரும்பும் ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை வைணவ ஆசார்யரான பிள்ளைலோகாசார்யர் அளித்துள்ளார். இவை மணிப்ரவாள நடையில் அமைந்திருக்கும். முக்தியில் ஆசையுடைய ஜீவன், அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய மூன்று ரகசியங்களான திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகியன 278 சுலோகங்களில் தரப்பட்டுள்ளன. இவற்றின் தெளிவான தமிழ் நடையும் நூலை அலங்கரிக்கிறது. பதரிகாசிரமத்தில் திருமந்திரத்தை நரனுக்கும், ஸ்ரீ விஷ்ணுலோகத்தில் த்வயத்தை பெரியபிராட்டிக்கும் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கும் சரமஸ்லோகத்தையும், உபதேசித்தவர் ஸ்ரீ மகா விஷ்ணு. அவரின் உபதேசத்தையே பிள்ளைலோகாசாரியார் மனிதருக்குத் தக்க விதத்தில் விளக்கங்களோடு, கேள்வி பதில் பாணியில் விளக்கியிருப்பது போற்றத்தக்கது. பகவானின் குணங்களை விளக்கியிருக்கும் கேள்விகளும், பதில்களும் அருமை. நல்ல பதிப்பு. நன்றி: தினமணி, 21/11/11.