பணம் சந்தேகங்கள் விளக்கங்கள்

பணம் சந்தேகங்கள் விளக்கங்கள், ஆசிரியர்-சோம. வள்ளியப்பன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை 17, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-560-6.html

பணம் சம்பாதிப்பது திறமையா? சம்பாதித்த பணத்தைச் சேமித்து, பெருக்கிப் பயன்படுத்தவது திறமையா என்றால், இரண்டாவதுதான் திறமை. முன்னதற்கு உழைப்பு மட்டும் போதும். பின்னதற்கு உழைப்புடன் ஓரளவு பொருளாதார அறிவும் வேண்டும். டாக்டர், எஞ்ஜீனியர், பேராசிரியர் என்று அதிகம் படித்தவர்களில் பலருக்குக் கூட இன்றும் பங்கு மார்க்கெட் பற்றியோ, ஆன்லைன் வர்த்தகம் பற்றியோ சரியாகத் தெரியாது. இப்படிப்பட்டவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பணத்தை பேங்கில் போடுவது மட்டும்தான். ஆனால் அஞ்சலக முதலீடுகள் முதல், பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புப் பத்திரங்கள், சிட்பண்டு, ரியல் எஸ்டேட், வங்கிடெபாஸிட்டுகள், பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டு, ஆன்லைன் வர்த்தகம், கமாடிட்டீஸ், கார்பன் டிரேடிங், ல் தங்கம், வெள்ளி என்று எல்லா முதலீட்டு வாய்ப்புகளையும் இந்நுல் விளக்குகிறது. இந்நூலாசிரியர் மீடியாவில் பணம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் தமிழில் பதில் அளித்தும், கட்டுரைகள் எழுதியும் வருபவர். அந்த வகையில் இந்நூலில் பணம் மற்றும் முதலீடகள் பற்றி, பலருக்கும் எழும் பொருளாதாரச் சந்தேகங்களுக்கு கேள்வி பதில் வடிவில் விளக்கியுள்ளார். குறிப்பாக தங்கம் வாங்கி சேமிக்கலாமா? போனஸாக வரும் பணத்தை எதில் முதலீடு செய்வத நல்லது? ஆன்லைனில் எப்படி வர்த்தகம் நடக்கிறது? இப்படி சுமார் 150 கேள்விகளுக்கு இந்நூலில் எளிமையாகவும் சுவையாகவும் பதில் அளித்துள்ளார். -பரக்கத். நன்றி: துக்ளக், 31/7/13.  

—-

 

டிஎன்பிசி அறிவியல், விகடன் பிரசுரம், விலை 155ரூ.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மிகுந்த நடுநிலையோடு நடப்பதால், போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகும் இளைய தலைமுறையினர் படிப்பு, பயிற்சி, சேகரிப்பு என நம் பணிகளை மிகச் சரியாகத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தேர்வு நுட்பம் அறிந்து அதற்கான தேடுதலை வகுத்துக்கொள்வதே வெற்றிக்கான வழியாக இருக்கும். அத்தகை முயற்சியாக அறிவியல் கேள்வி பதில்களை இந்த நூலில் அற்புதமாகத் தொகுத்து இருக்கிறார்கள். எல்லோருக்கும் தேவையான அறிவியல் களஞ்சியமாக விளங்கும் இந்த நூல். உங்களின் வெற்றியை நிச்சயம் சாத்தியப்படுத்தும். -ஏ. நவநீதகிருஷ்ணன். தலைவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். -நன்றி: விகடன், 25/7/13.

Leave a Reply

Your email address will not be published.