போதியின் நிழல்
போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-6.html
2500 ஆண்டுகளுக்கு முன்னால் தனி ஒரு மனிதராக, சீனாவிலிருந்து இந்தியா வந்து திரும்பியவர் யுவான் சுவாங். இவ்ர இந்தியா வந்தது, அத்தேடல் காரணமாகவும், பௌத்த தரிசனத்துக்காகவும், பௌத்தம் ஒரு மதமாக இந்தியாவை விட்டு விலகி இருக்கலாம். ஆனால் சமூகத்தின் அகமனதில் புத்தர் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கிறார் என்று முன்னுரையில் எழுதுகிறார் ஆசிரியர் அசோகன் நாகமுத்து. இந்தியா முழுவதும் பரவியிருந்த பௌத்தத்தின் எச்சமே இப்போது நம்மிடையே இருக்கும் அரச மரவழிபாடு என்ற கருத்தைப் பதிவு செய்கிறார். வரைபட இணைப்பு, யுவான் சுவாங்கின் பயணப் பாதையைக் காட்டுகிறது. யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் எழுதப்பட்டது ஆங்கிலத்துக்குப் போனது. சீனப் பேரரசரின் கட்டளையை மீறியவராய் பௌத்த ஞானத்தை விரிவாக்கிக் கொள்ளப் பயணித்த யுவான் சுவாங் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியபோது 22 குதிரைகளில் 627 சம்ஸ்கிருத நூல்களையும், புத்த பிரானின் 115 புனிதப் பொருட்களையும், புத்தரின் பொற்சிலை ஒன்றையும் எடுத்து வந்தாராம். அறுபத்தைந்து வயதில் கி.பி. 664இல் காலமாகும் வரை யுவான்சுவாங் ஈடுபட்டது அறநூற்றுக்கும் மேற்பட்ட வடமொழி நூல்களைச் சீன மொழியில் எழுதும் பணியில் என்னும் செய்தி பிரமிப்பூட்டுகிறது. -சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 17/3/13.
—-
ஆன்மிக அறிவியல், கவிஞர் கிளியனூர் அஜீஸ், பஷாரத் பப்ளிஷர்ஸ், 83, நாயக்கன் தெரு, மண்ணடி, சென்னை 1, விலை 70ரூ.
இஸ்லாத்தைப் பற்றிய ஆழமான அறிமுகமாக திகழும் வகையில் இதனைப் படைத்து இருக்கிறார் ஆசிரியர். கவிஞர் கிளியனூர் அஜீஸ். தனது ஆன்மிக ஆராய்ச்சி மூலம் பல நல்ல தகவல்களையும், அறிஞர் அண்ணா உள்பட பல அறிஞர்களின் மேற்கோள்களையும் எடுத்துக் கூறி இருப்பது சிறப்பாக இருக்கிறது.
—-
வெங்காயம், அமுதசுரபி பண்ணை, வி.ஏம்.தோட்டம், பழங்கரை அஞ்சல், அவிநாசி 641654, விலை 30ரூ.
வெங்காயம் சாகுபடி செய்பவர்களுக்கு தேவையான தகவல்களைக் கொண்ட புத்தகம்.
—-
சீதாகாச கீதை, ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த சுவாமிகள், தமிழில் ஸ்ரீபண்டித.கி. வேங்கடகோபால செட்டியார், ஸ்ரீமுரளி பப்ளிகேஷன், 159, டி.டி.கே. ரோடு, சென்னை 18, விலை 70ரூ.
ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த சுவாமிகளால் கன்னடத்தில் எழுதப்பட்ட ஆன்மிக தத்துவங்கள் அடங்கிய நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் ஸ்ரீபண்டித கி. வேங்கடகோபால செட்டியார். தொகுத்தவர் பிரம்மஸ்ரீ ஆர். ஜெகதீசன். நன்றி: தினத்தந்தி, 12/9/12.