நல்லவற்றையே நாடுங்கள்

நல்லவற்றையே நாடுங்கள், மு.முகம்மது சலாகுதீன், பஷாரத் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 80ரூ. நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த இந்நூலாசிரியர், நல்ல எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவர். இவர் தமிழகத்தின் மிகப் பெரும் நாளிதழான ‘தினத்தந்தி’ வெள்ளி மலரில் அவ்வப்போது எழுதிய மதநல்லிணக்கம் மற்றும் சமயரீதியிலான கட்டுரைகளில் சிறப்பானவற்றின் தொகுப்பே இந்நூல். இக்கட்டுரைகள் ஜாதி – மத வேறுபாடின்றி பலராலும் படித்து பாராட்டப்பட்டவை. மனிதன் எத்தகைய குணநலன்களோடு – எப்படி வாழ்வது, அது சமுதாயத்திற்கும், சமயத்திற்கும் எப்படி ஏற்றது என்பன போன்றவற்றை குர் – ஆன் மற்றும் […]

Read more

வரலாற்று நாயகர் முகம்மது நபி

வரலாற்று நாயகர் முகம்மது நபி, அ. முகம்மது ஜமால், பஷாரத் பப்ளிஷர்ஸ், விலை 220ரூ. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், உலக மக்கள் அனைவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். உலக வரலாற்றில் வேறு எந்தத் தலைவரும் ஆன்மிகம், சமூக சீர்திருத்தம், நீதி மிக்க ஆட்சி ஆகிய மூன்று துறைகளிலும் வெற்றி பெறவில்லை. வாழ்நாளில் 23 ஆண்டுகளில் இந்தச் சாதனையை அவர்கள் நிகழ்த்தி காட்டி இருக்கிறார்கள். இத்தகைய வரலாற்று நாயகர், நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அ. முகம்மது ஜமால், எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் […]

Read more

போதியின் நிழல்

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-6.html 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தனி ஒரு மனிதராக, சீனாவிலிருந்து இந்தியா வந்து திரும்பியவர் யுவான் சுவாங். இவ்ர இந்தியா வந்தது, அத்தேடல் காரணமாகவும், பௌத்த தரிசனத்துக்காகவும், பௌத்தம் ஒரு மதமாக இந்தியாவை விட்டு விலகி இருக்கலாம். ஆனால் சமூகத்தின் அகமனதில் புத்தர் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கிறார் என்று முன்னுரையில் எழுதுகிறார் ஆசிரியர் அசோகன் நாகமுத்து. இந்தியா முழுவதும் பரவியிருந்த  பௌத்தத்தின் எச்சமே இப்போது நம்மிடையே […]

Read more