வரலாற்று நாயகர் முகம்மது நபி
வரலாற்று நாயகர் முகம்மது நபி, அ. முகம்மது ஜமால், பஷாரத் பப்ளிஷர்ஸ், விலை 220ரூ.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், உலக மக்கள் அனைவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். உலக வரலாற்றில் வேறு எந்தத் தலைவரும் ஆன்மிகம், சமூக சீர்திருத்தம், நீதி மிக்க ஆட்சி ஆகிய மூன்று துறைகளிலும் வெற்றி பெறவில்லை. வாழ்நாளில் 23 ஆண்டுகளில் இந்தச் சாதனையை அவர்கள் நிகழ்த்தி காட்டி இருக்கிறார்கள். இத்தகைய வரலாற்று நாயகர், நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அ. முகம்மது ஜமால், எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதியுள்ளார். நபிகள் நாயகம் பிறந்தது முதல் அவர்களின் இறுதி நாட்கள் வரை நிகழ்ந்த சம்பவங்களை ஒன்றுவிடாமல், சுவை குன்றாமல் எடுத்துரைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/3/2016.
—-
சமையல் புத்தகங்கள், பானுப்ரியா, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ.
அசத்தலான சூப் வகைகள்(சைவம்), சூப்பர் பிரியாணி வகைகள்(சைவம்)இ அசத்தலான கேக்வகைகள், சத்தான கொழுக்கட்டை ஆகிய 4 புத்தகங்களை பானுப்ரியா எழுத, அவற்றை அருணா பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகத்தின் விலை 40ரூ. நன்றி: தினத்தந்தி, 16/3/2016.