காலம்தோறும் நரசிங்கம்
காலம்தோறும் நரசிங்கம் – பண்பாட்டுக் கட்டுரைகள், ஜடாயு, தடம் பதிப்பகம், பக். 204, விலை 130ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000025223.html பண்பாட்டுக் கட்டுரைகள் என்ற உபதலைப்புக்கு ஏற்ப, பாரத ஹிந்துப் பண்பாடு தொடர்பான விழுமியங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் 20 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது. வாழும் பிள்ளை என்ற தலைப்பிலான முதல் கட்டுரை, மகாகவி பாரதியின் விநாயக தரிசனத்தை விண்டுரைக்கிறது. அடுத்த கட்டுரை, அமெரிக்க எழுத்தாளர் மார்க் மார்ஃபோர்டு வியந்து போற்றும் அம்பலவாணனாகிய நடராஜர் பற்றியது. மகாத்மா காந்தி கண்ட ராமராஜ்ஜியம், கிராமராஜ்ஜியமே என்ற விளக்கம், தன்னைத் தோற்றபின் என்னைத் தோற்றாரா என்று திரொளபதி எழுப்பிய மறக்கவொண்ணா கேள்வி, மூவித தொன்ம அடுக்குகளில் மூழ்கியுள்ள ஐயப்ப சரிதம், சேவை என்ற போர்வையில் நடத்தப்படும் மதமாற்றங்கள், ஹிந்துத்துவம் என்ற கோட்பாடு வளர்ந்த விதம், சாதீய உடைப்பிலும் சமூக ஒற்றுமையிலும் ஆர். எஸ். எஸ். அமைப்பின் பங்கு, அப்துல் கலாமின் நினைவுகள், ராமாயணம், மகாபாரதம் என விரிவான பல விஷயங்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் இந்நூலாசிரியர் எளிமையாகவும் ஏற்கும் விதத்திலும் எழுதியிருக்கிறார். நூல் தலைப்பிலான காலம்தோறும் நரசிங்கம் கட்டுரை, பல்வேறு காலகட்டங்களில் நரசிம்மர் வழிபாடும், சிற்ப வடிவங்களும் மாற்றம் பெற்று வருவதை விவரிக்கிறது. முத்தாய்ப்பாக, வேதாந்தத்தில் இருந்து வேறுபட்டதாக சிலரால் கூறப்படும் (சைவ) சித்தாந்த குழப்பத்துக்கு இறுதிக் கட்டுரை உறுதியான முற்றுப்புள்ளி வைக்கிறது. நன்றி: தினமணி, 8/2/2016.