மன்னிப்பின் மகத்துவம்
மன்னிப்பின் மகத்துவம், தலாய்லாமா, தமிழில்-ஜார்ஜினா குமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 256, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-606-7.html
பொறாமை, கோபம் இவற்றால் அன்பான உறவுகளுக்குள் ஏற்படும் போராட்டங்களைப் பற்றித் தலாய்லாமா, தன்னுடைய சொற்பொழிவுகளில் சொன்ன கருத்துக்களை அவருடன் பயணம் செய்த விக்டன்ச்சான் நூலாகப் பதிவு செய்திருக்கிறார். தவறு எங்கிருந்து தோன்றுகிறது? தவறுக்கு தண்டனைதான் சரியான தீர்வா? அதற்கான மாற்று வழி எது? மன்னிப்பின் மகத்துவத்தால் நிகழும் அற்புதங்கள் எவை? போன்றவை இந்த நூலில் பதிவாகியிருக்கின்றன. படிப்பவரின் மனதில் தன்னைக் குறித்த சுயவிமர்சனத்தை ஏற்படும் செய்திகள் நூல் முழுவதும் நிறைந்திருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு கருத்து, கோபம் அல்லது கர்வம் போன்ற உணர்வுகளை முற்றிலும் போக்கிவிட வேண்டும் என்று நாம் கூறவில்லை. குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறோம். பரஸ்பர சார்புநிலை என்பது முக்கியமானது. ஏனெனில் அது வெறும் கருத்து மட்டும் அல்ல. இந்த அழிக்கும் தன்மை கொண்ட உணர்ச்சிகளால் உருவாகும் துயரத்தை உண்மையிலேயே குறைக்க அதனால் உதவமுடியும்.
—-
நீயே வெல்வாய் பாதையாகும் பாறைகள், க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம், சென்னை 29, பக்.104, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-515-9.html
தமது வாழ்வில் கரடு முரடான அனுபவங்களையும் அவற்றைத் தாண்டி, தாம் வெற்றி பெற்ற விதத்தையும் முன்னுரையாகக்கொண்டு நூலைத் தொடங்கியிருக்கிறார் ஆசிரியர். தன்னம்பிக்கை நூல்களில் வழக்கமாக இடம்பிடிக்கும் சூழலை விளக்கும் குட்டிக் கதைகளும், சிக்மண்ட் ஃபிராய்டு போன்றோரின் மேற்கோள்களும் இந்த நூலில் உள்ளன. இருப்பினும் இன்னொரு தன்னம்பிக்கை நூல் என்று கூறும்படி இல்லாமல், தம் சொந்த வாழ்வின் அனுபவங்களைக்கொண்டு அணுகியிருப்பதன் மூலம் இந்நூலை மற்றவற்றிலிருந்து சற்று வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார். 23 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடக் கூடிய அளவில் சுருக்கமாகவும், எளிமையாகவும் அமைந்திருக்கிறது. நன்றி: தினமணி, 21/11/11.