ஊஞ்சல்
ஊஞ்சல், உமா ஜானகிராமன், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, பக். 122, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-325-7.html
ஆசிரியை உமா ஜானகிராமன் இரக்கம் மிகுந்தவர் என்பது, இந்தத் தொகுதியைப் படிக்கும்போது தெரிகிறது. மேல்நாட்டு மருமகளை வெறுக்கும் ஒரு சாதிரிகள், கடைசியில் அவள் அன்பின் ஆழத்தைக் கண்டு சிலிர்க்கும் மேன்மையைச் சொல்லும் புத்திர சோகம் இதிலுள்ள சிறந்த கதை. மேடுகள் பள்ளங்கள் என, பல நேர்த்தியான சிறுகதைகள் அடங்கிய சிறந்த தொகுதி. நன்றி; தினமலர், 06/11/2011.
—-
சுராவின். டி.என்.பி.எஸ்.சி. பொதுத்தமிழ், வெளியீட்டாளர்-வீ.வீ.கே. சுப்புராசு, செ. சசிகலாதேவி, 1620, 16வது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை 600040, பக். 528, விலை 240ரூ.
போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என அனைத்தும், தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. வாக்கிய வகைகள், இலக்கணக் குறிப்புகள், ஓரெழுத்து ஒரு மொழி, சந்திப்பிழை, வழூஉச் சொல்திருத்தம், என மொழிப்பெயர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது. 35 மாதிரி வினாத்தாள்கள் பயிற்சிக்காக கொடுக்கப்பட்டுள்ளன. 1996 – 2011ம் ஆண்டு வரை நடைபெற்ற டி.என்.பி.சி. தேர்வு வினாக்கள், விடைகளுடன் இடம் பெற்றுள்ளன. -ஆரா.
—-
ஆன்மிக வினா விடை (ஐந்தாம் பாகம்), சுவாமி கமலாத்மானந்தர், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரிய நாயக்கன்பாளையம், கோவை, பக். 362, விலை 70ரூ.
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டு வரும் ஸ்ரீராம கிருஷ்ண விஜயம் மாத இதழில் சுவாமி கமலாத்மானந்தர் ஆசிரியப் பொறுப்பேற்ற இருந்தபோது ஆன்மிக வினா விடை என்ற பகுதியைத் தொடங்கினார். அந்தப் பகுதியைத் தொகுத்து இதுவரை நான்கு பாகங்கள் வெளிவந்து ஆதரவைப் பெற்றுவிட்டன. 2000 முதல் 2004 வரை வெளிவந்த பகுதியைத் தொகுத்து, இந்த ஆன்மிக வினா விடை ஐந்தாம்பாகம் வெளிவந்துள்ளது. 632 வினாக்களுக்கு விடைகளை வழங்கியிருக்கிறார் சுவாமிஜி. கைவசம் எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டிய தொகுப்பு வரிசை இது. -ஜனகன். நன்றி; தினமலர், 11/12/2011.