பெண்மை
பெண்மை, (ஸ்திரீ தர்மம் பற்றி ஸ்ரீ மகா பெரியவா கூறிய கருத்துக்கள்)தொகுப்பு-ரா.கணபதி, கிரி டிரேடிங் ஏஜன்சி, 3 சன்னிதித் தெரு, மயிலை, சென்னை 600004, விலை 50ரூ.
உலகம் தர்மத்தில் நிலைக்க, ஸ்தீரிகள் தங்கள் தர்மத்தில் சரியாக இருக்க வேண்டும் என்று காஞ்சி மாமுனிவர் தெரிவித்த கருத்துக்கள் நூலாக உருவெடுத்திருக்கிறது. ஆசிரியர் ரா. கணபதி எழுதிய தெய்வதரிசனம் அனைவரும் அறிந்த நூல். அது காஞ்சி மாமுனிவரை பிரதிபலிக்கும் ஆன்மிக நூல். அந்த நூல் வெளியானபோது அதில் இடம் பெறாத, ஸ்திரீ தர்மம் குறித்த முனிவரின் கருத்துக்கள் இப்போது நூலாக மலர்ந்திருக்கிறது என்று முன்னுரையில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது. தெய்வசங்கல்பமாக வெளிவந்திருக்கிறது என்ற தகவலும் அதில் உள்ளது. இன்று வியர்க்க வியர்க்க பணம் சம்பாதிக்கும் குடும்பங்களில் ஆண்களும் பெண்களும் அட்ஜஸ்ட் பண்ணிப் போக வேண்டும் என்று, மாமுனிவர் கூறிய அருளுரை இடம் பெற்றிருக்கிறது. அவர் கூறும் நடைமுறைகளைப் பெண்கள் (ஸ்திரீகள்) பின்பற்றுவது சுலபமா என்பதும் புரியாததாக தோன்றும். ஆனால் மகான்கள் வாக்கு, இறைவன் வாக்கு என்ற கருத்து, நம் நாட்டில் ஊறிப்போன விஷயம் அல்லவா.
—-
உள்ளத்திற்கு ஐந்தாவது கோப்பை சூப், ஆங்கில மூலம்-ஜான் கேன் பீல்டு மற்றும் மார்க் விக்டர் ஜான்சன், தமிழில், வேங்கடகிருஷ்ணன், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 328, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-236-6.html
உலகப் புகழ் பெற்ற சிக்கன் சூப் தொடர் புத்தகங்களில் பிப்த் ஹெல்பிங் ஆப் சிக்கன் சூப் ஃபார் தி ஸோல் என்ற புத்தகத்தின் எளிய தமிழாக்கமே இந்த நூல். பல மேதைகளின் வெற்றிக்கதைகளை குட்டிக் கதைகளாக தொகுத்து தந்திருப்பது படிக்க அலுப்பூட்டாமல் இருக்கிறது. -சிவா. நன்றி: தினமலர், 11/12/13.