கள்ளோ? காவியமோ?

கள்ளோ? காவியமோ?, டாக்டர் மு. வரதராசன், பாரிநிலையம், 90, பிராட்வே, சென்னை 108, பக், 240, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-320-7.html

தமிழர்களின் இதயங்களில் நீங்காது நிலைபெற்று திகழ்பவர், தெய்வத்திரு டாக்டர் மு.வ. அவர்கள், என்று கூறுவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும். அன்னாரின் நாவல்களும், இலக்கிய நூல்களும், கட்டுரைகளும், மொழி இயல் நூல்களும், மற்றவைகளும் படிப்போர் மனதில் நிலைத்து நிற்கும் என்று உறுதியாகக் கூறலாம். கள்ளோ? காவியமோ? என்ற இந்நூலும் படிப்போர் மனதில் கிளர்ச்சியை உண்டாக்கும் என்று கூறலாம். மங்கையும், அருளப்பனும் கதைகயை நகர்த்திச் செல்கின்றனர். வேலைக்காரியாக வந்த மங்கையை மணந்து, இல்லறம் நடத்திய அருளப்பன், ஒரு சிறிய மனவருத்தத்தால் மங்கையைப் பிரிந்து, சில ஆண்டுகளில் தன் தவறை உணர்ந்து அவளை இணைத்துக் கொண்டதும், மகள் தேன்மொழியின் அம்மா என்ற அழைப்பிற்காக மங்கை ஏங்குவதும், பின் அது கிடைப்பதும் நூல் படிப்போர் கண்களை ஈரமாக்கவும் செய்யும். அன்பின் தன்மையைப் புலப்படுத்தவும் செய்யும். நூலின் முன் பகுதியில் உள்ள மு.வ. அவர்களின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைஞர்கள் படித்து, தம்மை உயர்த்திக் கொள்ள உதவும் என்றே கூறலாம். 64 ஆண்டகள் கழித்து மறுபதிப்பாக வந்துள்ள இந்நூல் எந்த நூற்றாண்டிற்கும் ஏற்றதொரு நூலாக விளங்கும். அனைவரும் படிக்க வேண்டிய நூலாகும். -டாக்டர் கலியன் சம்பத்து.  

—-

 

மருது காவியம், கவிஞர் இரா. பொற்கைப் பாண்டியன், கற்பகம் புத்தக மையம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 200, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-5.html

இந்திய விடுதலை வேள்வியில் தன் இன்உயிரை நீத்த மருது பாண்டியர் திருப்பத்தூர் வீதியில் தூக்கிலிடப்பட்டு தலைகளை நட்டு வைத்து காக்கை கழுகுகளால் கொத்தப்பட்ட வீரர்கள் பினாங்கு தீவுக்குக் கடத்தப்பட்ட சின்ன மருதுவின் ஒரே வாரிசு துரைசாமி அவரோடு கடத்தப்பட்ட வாராப்பூர் பொம்மை நாயக்கர், இவர்களின் வீரவரலாறு, வீரிய மிக்க கவிதைகள். பெரிய மருதுவோ பெரும் புலி சின்ன மருதுவோ சிறுத்தைப்புலி வாள் வீச்சும் வளரி வீச்சும் சின்ன மருதுவின் திறம் சொல்லும் கவிஞரின் அனல் வரிகள் ரத்தத்தைச் சூடேற்றும். -எஸ். குரு. நன்றி: தினமலர், 11/12/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *