பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், ச.க. இளங்கோ, பாரிநிலையம், பக். 488, விலை 180ரூ. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் திரைப்படத் துறையிலும் தனது முத்திரைகளைப் பதித்துள்ளார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் முதன்முதலில் திரைத்துறையில் நுழைந்தவர் பாரதிதாசனே. 1937ஆம் ஆண்டு முதன்முதலில் பாலாமணி அல்லது பக்காத்திருடன் படத்துக்குப் பாடல்கள் எழுதினார். 1938இல் எழுத்தாளர் வ.ரா.கேட்டுக்கொண்டதற்கிணங்க ஸ்ரீராமானுஜர் படத்துக்குப் பாடல் எழுதினார். 1940இல் வெளிவந்த காளமேகம் திரைப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதியது பாரதிதாசனே. ஓர் இரவு, பராசக்தி, இரத்தக்கண்ணீர், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி உள்ளிட்ட 17 படங்களில் பாரதிதாசனின் […]

Read more

நமது தமிழ்நாடு

நமது தமிழ்நாடு, செங்கற்பட்டு மாவட்டம் (1963 வரை) கோவை மாவட்டம் (1961வரை) வடஆர்க்காடு மாவட்டம் (1961 வரை), சோமலெ, பாரிநிலையம், சென்னை, பக். 208/272/224, விலை ரூ.75/100/85 தமிழில் பயண நூல்களை படைத்த ஏ.கே.செட்டியாரின் அடியொற்றி, சோமலெ, பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். காரைக்குடி அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தில் பிறந்த சோம.லெட்சுமணன், தன் தொழில் நிமித்தமாக, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் சுற்றி வந்தவர். தமிழகத்தில், 1960களில் பிரதான 10 மாவட்டங்களைப் பற்றி, அவர் நேரில் சென்று பார்த்த விஷயங்களை தொகுத்து எழுதியவை […]

Read more

கள்ளோ? காவியமோ?

கள்ளோ? காவியமோ?, டாக்டர் மு. வரதராசன், பாரிநிலையம், 90, பிராட்வே, சென்னை 108, பக், 240, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-320-7.html தமிழர்களின் இதயங்களில் நீங்காது நிலைபெற்று திகழ்பவர், தெய்வத்திரு டாக்டர் மு.வ. அவர்கள், என்று கூறுவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும். அன்னாரின் நாவல்களும், இலக்கிய நூல்களும், கட்டுரைகளும், மொழி இயல் நூல்களும், மற்றவைகளும் படிப்போர் மனதில் நிலைத்து நிற்கும் என்று உறுதியாகக் கூறலாம். கள்ளோ? காவியமோ? என்ற இந்நூலும் படிப்போர் மனதில் கிளர்ச்சியை […]

Read more