நமது தமிழ்நாடு

நமது தமிழ்நாடு, செங்கற்பட்டு மாவட்டம் (1963 வரை) கோவை மாவட்டம் (1961வரை) வடஆர்க்காடு மாவட்டம் (1961 வரை), சோமலெ, பாரிநிலையம், சென்னை, பக். 208/272/224, விலை ரூ.75/100/85 தமிழில் பயண நூல்களை படைத்த ஏ.கே.செட்டியாரின் அடியொற்றி, சோமலெ, பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். காரைக்குடி அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தில் பிறந்த சோம.லெட்சுமணன், தன் தொழில் நிமித்தமாக, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் சுற்றி வந்தவர். தமிழகத்தில், 1960களில் பிரதான 10 மாவட்டங்களைப் பற்றி, அவர் நேரில் சென்று பார்த்த விஷயங்களை தொகுத்து எழுதியவை […]

Read more

திருப்பாவை அமுதம்

திருப்பாவை அமுதம், தாடா. ஸுப்ரமண்யம், தாடா. ஸுப்ரமண்யம், கைத்தறி நகர், நிலையூர், மதுரை 625005, விலை 230ரூ. தமிழ் மறை எனப் பாராட்டப்படும் நாலாயிர திவ்யப்ரபந்தத்தின் ஒரு பகுதிதான் திருப்பாவை. ஸ்ரீமத் நாராயணனைத் துதித்துப் போற்றும் பாடல்களின் தொகுப்பாகிய திவ்யப்ரபந்தத்தை இயற்றிய 12 ஆழ்வார்களுள், குறிப்பிடத்தக்கவர் பெரியாழ்வார். இவரது பெண் பிள்ளைதான் ஸ்ரீ ஆண்டாள். இவர் ஸ்ரீ நாராயணன் மீது கொண்ட அளவிட முடியாத காதலால், அவனையே தனது கணவனாக மனதில் வரித்து, பக்தி பரவசத்துடன் பாடிய 30 பாடல்களின் தொகுப்பே திருப்பாவை. மாதங்களில் […]

Read more

ஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள்

ஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள், செவல்குளம் ஆச்சா, சுரா பதிப்பகம், சென்னை 40, பக். 202, விலை 90ரூ. சோசலிச சமுதாய மேதைகள் என்ற வரிசையில் சீனாவின் ஸன் யாட் ஸென், காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய மூவரையும் வைத்து அவர்களுடைய வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களைச் சுவையாக விளக்கும் நூல். சீனாவில் மஞ்சு வம்சத்தின் ஆட்சியை எதிர்த்துப் போராடிய ஸன் யாட் சென் அடிப்படையில் பொதுவுடைமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அவ்வழியில் சீனாவில் சோசலிச சமுதாயத்தை உருவாக்கப் பாடுபட்டவர் அல்ல. எனினும் […]

Read more

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள்

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள், வே. குமரவேல், சங்கம் பதிப்பகம், பக். 560, விலை 350ரூ. ஆடுவதும், ஓடுவதும் அனைவரையும் சாடுவதும், தரங்கெட்ட சேட்டைகளை நாடுவதுமே, இன்று நகைச்சுவை என்று சினிமாவில் ஆகிவிட்டது. பிறரைப் புண்படுத்தி, ஏமாற்றி, சிரிக்க வைக்க படாதபாடுபடும் இன்றைய திரையுலகம், கற்றுக்கொள்ள வேண்டிய பாடநூலாக, இந்த கலைவாணர் நூல் அருமையாக உருவாகியுள்ளது. சீர்திருத்தமும், விவேகமும் நிறைந்த அவரது ஒவ்வொரு யதார்த்த வசனமும் சிரிக்க வைத்ததுடன், சிந்திக்கவும் வைத்து சமூகத்தை சீர்திருத்தம் செய்துள்ளது என்பதை, 214 தலைப்புகளில், 560 பக்கங்களில் இந்த நூல் […]

Read more

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள்

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள், தொகுப்பாசிரியர்-வே. குமரவேல், சங்கம் பதிப்பகம், சென்னை 1, பக். 560, விலை 350ரூ. இதுவரை ஒரே ஒரு என்.எஸ்.கிருஷ்ணனைத்தான் தமிழ்க் கலையுலகம் தந்துள்ளது. அவரது ஒப்புயர்வற்ற கலைப் பணியை சிந்தனைச் செல்வத்தை இதுவரை தோன்றிய எந்த நடிகனிடத்திலும் தமிழகம் பெற்றதில்லை என்று கலைவாணரைப் பாராட்டி கருத்துத் தெரிவித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இதுபோல் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலையுலகைச் சேர்ந்தவர்கள், இலக்கியவாதிகள், அரசியல் பிரமுகர்கள் கலைவாணரைப் பற்றி தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்து இந்நூலில் வழங்கியிருக்கிறார் தொகுப்பாசிரியர் வே. குமரவேல். சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் […]

Read more