ஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள்

ஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள், செவல்குளம் ஆச்சா, சுரா பதிப்பகம், சென்னை 40, பக். 202, விலை 90ரூ. சோசலிச சமுதாய மேதைகள் என்ற வரிசையில் சீனாவின் ஸன் யாட் ஸென், காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய மூவரையும் வைத்து அவர்களுடைய வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களைச் சுவையாக விளக்கும் நூல். சீனாவில் மஞ்சு வம்சத்தின் ஆட்சியை எதிர்த்துப் போராடிய ஸன் யாட் சென் அடிப்படையில் பொதுவுடைமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அவ்வழியில் சீனாவில் சோசலிச சமுதாயத்தை உருவாக்கப் பாடுபட்டவர் அல்ல. எனினும் […]

Read more

சிபி

சிபி, ஏ.ஏ.ஹெச்.கே.கோரி, இருவாட்சி, 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, பக். 288, விலை 170ரூ. சிறுபான்மை பிரிவு என்பதன் சுருக்கமே சிபி என்னும் நாயகனின் பெயராக இருக்கிறது என்பதைப் படிக்கும் இடத்திலிருந்தே சுவாரஸ்யம் தொடங்கிவிடுகின்றது. கற்பனைப் பாத்திரங்களோடு மகாத்மாகாந்தி, நேரு, காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்ற அரசியல் தலைவர்களையும் இந்தத் தலைமுறைக்குத் தெரியாத அவர்களின் அரிய குணங்களையும் நம் கண்முன் தரிசனப்படுத்துகிறது இந்நாவல். மேற்கத்திய கலை வடிவமான டாக்குடிராமா என்னும் யுக்தியில் எழுதப்பட்டிருககும் இந்த நாவலில், இறந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் […]

Read more

சுற்றுச்சூழல் சிந்தனைகள்

சுற்றுச்சூழல் சிந்தனைகள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், 19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-8.html சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரைகள் கொண்ட புத்தகம். மரங்களை வளர்க்க வேண்டிய அவசியம், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பிரச்சினைகள், முல்லைப் பெரியாறு விவகாரம்… இப்படிப் பல்வேறு விஷயங்களையும் அலசி ஆராய்கிறார் நூலாசிரியர் ஜே.ஜோபிரகாஷ். முக்கியமாக இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.   —-   விண்வெளியின் வியப்பூட்டும் செய்திகள், […]

Read more