சுற்றுச்சூழல் சிந்தனைகள்
சுற்றுச்சூழல் சிந்தனைகள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், 19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-8.html
சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரைகள் கொண்ட புத்தகம். மரங்களை வளர்க்க வேண்டிய அவசியம், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பிரச்சினைகள், முல்லைப் பெரியாறு விவகாரம்… இப்படிப் பல்வேறு விஷயங்களையும் அலசி ஆராய்கிறார் நூலாசிரியர் ஜே.ஜோபிரகாஷ். முக்கியமாக இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
—-
விண்வெளியின் வியப்பூட்டும் செய்திகள், எடையூர் சிவமதி, வின் வின் புக்ஸ், 1620 ஜே பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை 40, விலை 50ரூ.
விண்வெளி பற்றி 81 தகவல்கள் இந்த நூலில் உள்ளன. அனைத்துமே படிப்பதற்கு வியப்பாக உள்ளன, மாணவர்கள் படித்து பயன் பெறலாம்.
—-
மாலை வெயில், கழுகுமலை ஸ்ரீகாந்த், நம்மொழி பதிப்பகம், 17/9 கென்னடி சதுக்கம் முதன்மை சாலை, செம்பியம், சென்னை11, விலை 50ரூ.
சுதந்திரம் கிட்டியும் சுகமில்லை செத்துவிடவும் மனதில்லை என்பது போன்ற உணர்ச்சி பூர்வமான கவிதைகள் அடங்கிய நூல்.
—-
ஆசார விதிகளின் அறிவியல் நோக்கு, செவல்குளம் ஆச்சா, சங்கர் பதிப்பகம், 21 டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 50ரூ.
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நமது முன்னோர்கள் கடைபிடித்து வந்த நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள், மூடநம்பிக்கையை சார்ந்தவை என்று சிலர் கூறியபோதிலும், அவை இன்றைய விஞ்ஞான உலக அனுபவத்திலும் நடைமுறை வாழ்க்கையிலும் அறிவியல் பூர்வமாக எந்த அளவுக்கு நிதர்சனமாக இருக்கின்றன என்பதை ஆதாரத்துடன் தொகுத்து வழங்கி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 27 பிப்ரவரி 2013,