பாரதப் பிரதமர்கள்(அன்று முதல் இன்றுவரை)
பாரதப் பிரதமர்கள்(அன்று முதல் இன்றுவரை), குன்றில் குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, பக்கங்கள் 232, விலை 120ரூ.
இந்தியத் திருநாடு விடுதலை பெற்றது முதல், இன்றுவரை 14 பிரதமர்களை கண்டுள்ளது. அவர்களின் அரசியல் மற்றும் ஆட்சிப் பணிகள் குறித்து, இந்நூல் மிக விரிவாகக் கூறுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி முசோலினியின் அழைப்பை ஏற்காத காரணம் (பக்க. 33), நேரு இந்திரா என்று பெயர் சூட்டப்பட்ட யானையை, ஜப்பான் மிருகக் காட்சி சாலைக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டதும், அந்த யானை, இந்திரா சுடப்பட்டு இறந்த அதே நாளில் (31.10.1984) மரணமடைந்தது என்பதும்(பக்க. 100) சர்க்கரை நோயுள்ள அடல்பிகாரி வாஜ்பாய் ஜி20 மாநாட்டின் விருந்தில் குலோப்ஜாமுனை அதிகஅளவில் உண்ட செய்தியும் இந்நூலில் படிக்க சுவையாக உள்ளது. – டாக்டர் கலியன் சம்பத்து.
—-
பெண்ணின் பெருந்தக்கது இல், முனைவர் தாயம்மாள் அறவாணன், தமிழ்க் கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு நாயுடு காலனி, அமைந்தகரை, சென்னை 29, பக்கங்கள் 240, விலை 120ரூ.
பெண்ணின் உயர் பண்பே ஒரு குடும்பத்திற்கு புகழும், அழகும் ஆகும். உண்மையில் ஒருவன் தன் வாழ்நாளில் அடையக் கூடியவற்றுள், பெண்ணை விட மேலான பொருள் எதுவும் இல்லை. இந்நூலில் ஆசிரியை அறுவகையான கோணங்களில் பெண்ணை பார்க்கிறார். பெண்டிரின் சங்க காலநிலை, மானுட விழுமாயங்களில், சிற்றிலக்கியங்களில் பெண்களின் நிலை, சிற்றிலக்கியங்களை படைத்த பெண்கள், இலக்கிய, இலக்கண உரையாசிரியராக பெண்கள் இருந்தனரா, ஏன் இல்லை? காரணங்கள், இயல், இசை இவற்றை படைக்கும் முத்தமிழ் திறன் பெண்களிடம் எவ்வாறு இருந்தது- இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தருகிறது இந்த நூல். – சிவா. நன்றி: தினமலர், 30 அக்டோபர் 2011.