அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம், முனைவர் தாயம்மாள் அறவாணன், தமிழ்கோட்டம் வெளியிடு, விலை 600ரூ. அன்புக்குரிய துணைவர் அறிஞர் அறவாணனுக்கு இந்த நுாலை காணிக்கையாக்கி, பெருமை சேர்த்திருக்கிறார் ஆசிரியர் தாயம்மாள், தமிழகத்தில், பல அவ்வையார்கள் விட்டு சென்ற அறநுால் பதிவுகள் அனைத்திற்கும் விளக்கமாக இந்த நுாலை எழுதியிருக்கிறார். அவ்வை என்ற சொல் வயதில் மூத்தவள், தமக்கை, பெண் துறவி ஆகியவற்றை குறிக்க வழங்குகிறது. சங்க கால அவ்வை தொடங்கி, பல அவ்வையார் வாழ்ந்திருக்கலாம் என்பதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். காதல் பாடல்களை அவ்வை பாடியதாக குறிக்கும் […]

Read more

பாரதப் பிரதமர்கள்(அன்று முதல் இன்றுவரை)

பாரதப் பிரதமர்கள்(அன்று முதல் இன்றுவரை), குன்றில் குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, பக்கங்கள் 232, விலை 120ரூ. இந்தியத் திருநாடு விடுதலை பெற்றது முதல், இன்றுவரை 14 பிரதமர்களை கண்டுள்ளது. அவர்களின் அரசியல் மற்றும் ஆட்சிப் பணிகள் குறித்து, இந்நூல் மிக விரிவாகக் கூறுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி முசோலினியின் அழைப்பை ஏற்காத காரணம் (பக்க. 33), நேரு இந்திரா என்று பெயர் […]

Read more