சமூகவியல் பார்வையில் பாரதியார்

சமூகவியல் பார்வையில் பாரதியார், க.ப.அறவாணன், தமிழ்க் கோட்டம்,பக்.232,  விலை ரூ.200.  மகாகவி பாரதியின் கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றில் இருந்து அவர் காலத்திய சமூகம் தொடர்பான அவருடைய கருத்துகளை விளக்கிக் கூறும் நூல். பாரதியாரின் தமிழ் வழிக் கல்வி பற்றிய கருத்து, சாதி ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய அவருடைய பார்வை, பெண் சுதந்திரம், தேசப் பற்று குறித்த அவருடைய கருத்துகள், பாரதி விரும்பிய குடியாட்சிமுறை, பொதுவுடமை குறித்த அவருடைய எண்ணம், பிற மொழி இலக்கியங்கள் குறித்த அவருடைய பார்வை என பல்வேறு பரிமாணங்களில் பாரதியை இந்நூல் […]

Read more

அறவாணர் திறனுரைகள்

அறவாணர் திறனுரைகள், க.அ.அறிவாளன், தமிழ்க் கோட்டம், விலைரூ.180. திறனாய்வு உலகத்தில் புதிதாக வந்துள்ளது இந்த நுால். ஐம்பத்தொன்பது நுால்கள் பற்றிய திறனாய்வுக் கருத்துரைகளின் தொகுப்பு. க.ப.அறவாணனின் காலத்திற்குப் பின் வெளிவந்துள்ளது. படைத்துள்ள திறனாய்வுரைகள் அனைத்தையும் தொகுத்து நன்கு வடிவமைத்து வெளியிட்டு உள்ளனர்.தொடக்க நிலை எழுத்தாளர் முதல் புகழ்பெற்ற எழுத்தாளர் வரை பேதம் இல்லாமல் திறனாய்வு வழங்கியுள்ளார் அறிஞர் அறவாணன். தந்தையின் நினைவைப் போற்றும் வகையில் மகன்கள் எடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. ஒரே புத்தகத்தில் ஐம்பத்தொன்பது புத்தகங்களைப் படிக்க முடியும் என்பதற்கு இந்தத் திறனுரைகள் சான்று […]

Read more

குற்றாலக் குறிஞ்சி

குற்றாலக் குறிஞ்சி, கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், பக். 360, விலை 275ரூ. 1992ஆம் ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் இது. தஞ்சையில் சரபோஜி மன்னர் காலத்தில் வாழ்ந்த குறிஞ்சி என்ற தாழ்ந்த குலத்தில் பிறந்த பாடகியின் வாழ்க்கையை இந்நாவல் சித்திரிக்கிறது. சரபோஜி மன்னராகட்டும், அக்காலத்தில் இருந்த பல ஜமீன்தார்களாகட்டும், குறிஞ்சியி இசையைவிட அவளுடைய அழகில் மயங்கி அவளை அடைய முயல்கின்றனர். பாடகி என்ற கர்வத்தோடும், பெருமையோடும் அவர்களின் முயற்சிகளுக்கெல்லாம் பணிய மறுக்கிறாள் குறிஞ்சி. அவளுடைய காதலன் சிறை வைக்கப்படுகிறான். அவன் […]

Read more

சைவ இலக்கிய வரலாறு

சைவ இலக்கிய வரலாறு, ஔவை சு. துரைசாமி பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 392, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-6.html சைவத் தமிழ்ப் பேரறிஞர் ஔவை துரைசாமிப் பிள்ளை. கி.பி. 700 முதல் கி.பி. 1000 வரையில், 300 ஆண்டுகளில் உருவான பக்திநூல்களின் வரலாற்றை, பக்தி மனத்துடனும், ஆய்வு நலத்துடனும் இந்நூலில் மிக அற்புதமாகத் தந்துள்ளார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா முதலிய 12 சைவத் திருமுறைகள் தோன்றிய காலத்தை சந்தேகத்துக்கு இடமின்றி இவர் உறுதி […]

Read more

தமிழர் சமுதாய சிந்தனைகள்

தமிழர் சமுதாய சிந்தனைகள், க.ப. அறவாணன், தமிழ்க் கோட்டம், பக். 128, விலை 100ரூ. பதினாறு தலைப்புகளில் சமுதாயச் சிந்தனைகளை அறவுரையாக, தமிழர் சமுதாயச் சிந்தனைகள் என்ற தலைப்பில் வழங்கியிருக்கிறார் க.ப. அறவாணன். அவ்வப்போது, பல ஏடுகளிலும் (தினமலர் உட்பட) இதழ்களிலும் ஆசிரியர் எழுதிய சமுதாயக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். திருமண வயதைக் குறைத்தால் என்ன? உலகத் தமிழர் கவனத்திற்கு, ஆகிய கட்டுரைகளில், நமது பாரம்பரியத்தை எடுத்துக்காட்டிய அதே சமயம், நடைமுறை சிக்கல்களையும் சொல்லியிருந்தது நல்ல அலசல். ஒவ்வொரு கட்டுரையும் சிந்தனையைத் தூண்டும், விதமாக […]

Read more

பாரதப் பிரதமர்கள்(அன்று முதல் இன்றுவரை)

பாரதப் பிரதமர்கள்(அன்று முதல் இன்றுவரை), குன்றில் குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, பக்கங்கள் 232, விலை 120ரூ. இந்தியத் திருநாடு விடுதலை பெற்றது முதல், இன்றுவரை 14 பிரதமர்களை கண்டுள்ளது. அவர்களின் அரசியல் மற்றும் ஆட்சிப் பணிகள் குறித்து, இந்நூல் மிக விரிவாகக் கூறுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி முசோலினியின் அழைப்பை ஏற்காத காரணம் (பக்க. 33), நேரு இந்திரா என்று பெயர் […]

Read more