சைவ இலக்கிய வரலாறு

சைவ இலக்கிய வரலாறு, ஔவை சு. துரைசாமி பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 392, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-6.html

சைவத் தமிழ்ப் பேரறிஞர் ஔவை துரைசாமிப் பிள்ளை. கி.பி. 700 முதல் கி.பி. 1000 வரையில், 300 ஆண்டுகளில் உருவான பக்திநூல்களின் வரலாற்றை, பக்தி மனத்துடனும், ஆய்வு நலத்துடனும் இந்நூலில் மிக அற்புதமாகத் தந்துள்ளார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா முதலிய 12 சைவத் திருமுறைகள் தோன்றிய காலத்தை சந்தேகத்துக்கு இடமின்றி இவர் உறுதி செய்திருப்பது, சமய உலகம் ஏற்க வேண்டிய மிகவும் அரிய உண்மைகளாகும். இந்நூல் தரும் ஆய்வுகளில் சில அரிய செய்திகள் இதோ- அப்பர் இளமை முழுதும் சமண சமயத்திலேயே கழித்தார். சங்கிலியாரிடம் செய்த சத்தியம் மீறியதால் சுந்தரர் கண்களை இழந்தார். மாணிக்கவாசகர் கால ஆய்வு சிறப்பாக அமைந்திருக்கிறது. திருஞான சம்பந்தரில் தொடங்கி, வேம்பையர் கோன் நாராயணன் வரை, 15 தலைப்புகளும் படித்து முடித்தால் சைவத் தமிழின் வாசம் நெஞ்சில் மறவாது என்றும் விசும். -முனைவர் மா.கி. ரமணன்.  

—-

 

இஸ்லாமியர் காலத் தமிழ் மக்கள் வரலாறு, க.ப. அறவாணன், தமிழ்க் கோட்டம், பக். 208, விலை 125ரூ

தமிழ்ச் சமுதாய வரலாற்றில், பாண்டியர் காலத்தின் நிறைவுப் பகுதியில் இஸ்லாமியர் நுழைவு திகழ்கிறது. மதுரையை மையமாக வைத்து இஸ்லாமியர்கள், 60 ஆண்டுகளே ஆண்டாலும் அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டு அரசியலிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் நிகழ்ந்த மாற்றங்கள் மிகப் பெரியவை. டில்லியை மையமாக வைத்து இஸ்லாமிய அரசியல் இங்கே இடம் பெற்றபோது, அவர்களது பழக்க வழக்கங்கள், சடங்கு, சம்பிரதாயங்கள் இஸ்லாமியர் அல்லாத மக்களிடமும் பரவின. உணவு, உடை, குழந்தைப் பிறப்பு, சுன்னத் முறை, மூக்குத்தி முதலான அணிகலன்கன், கைலி (லுங்கி) என உடுத்தும் உடையிலும்கூடப் பெருமாற்றம் நிகழ்ந்தது. பிரியாணி என்ற ஆட்டிறைச்சி உணவு, இஸ்லாமியர் வரவிற்குப் பின்புதான் தமிழரிடம் அதிகமாக பழக்கமாயிற்று. தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் தமிழர்களே.  தமிழர் அல்லாத அயல் நாட்டவர் இல்லை என்பதை ஆசிரியர் கூறுகிறார். படிக்க வேண்டிய நூல். -சிவா. நன்றி: தினமலர், 20/10/2013.

Leave a Reply

Your email address will not be published.