சாலப்பரிந்து

சாலப்பரிந்து, நாஞ்சில் நாடன், க. மோகன ரங்கன் (காலச்சுவடு நவீனத் தமிழ் கிளாசிக் சிறுகதை வரிசை), காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக். 238, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-3.html

இலக்கிய தரமான சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியுள்ள நாஞ்சில் நாடன், சாகித்ய அகடமி விருதாளர், ஒரு நோக்கத்தோடு பேனாவைப் பிடித்திருக்கும், இவருடைய படைப்பகக்களில் சமுதாயம் பற்றிய பிரக்ஞை சற்று அதிகமாக இருக்கும். வீட்டுக்கும் வெளியே அவருக்கு கிடைத்த அனுபவங்கள், வாசகர்களுக்கு இலக்கியமாக வடிவம் பெற்று மகிழ்வூட்டுகிறது. யோசிக்க வைக்கிறது. ஒரு சிலரையாவது சிந்திகவும் தூண்டக்கூடும். தொகுப்பாசிரியர் இந்த நூலுக்காக, 25 சிறுகதைகளை தேர்வு செய்வதுடன் ஒரு அருமையான முன்னுரை மண்ணும் மனிதரும் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். இவருடைய இலக்கிய ஆர்வத்தை ரசனைத் திறத்தை உணர்த்தும் முன்னுரை.‘ நாஞ்சில் நாடனின் கதைகளில், நாஞ்சில் தமிழ் சற்றே தூக்கலாக, ஓரிரு இடங்களில் நெருடலாகவும் இருக்கிறது. சில கொச்சையான (ஆபாச) வசவுச் சொற்களும், கதைகளில் இடையிடையே தெறித்து விழுகின்றன. எல்லாம் கதைகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவையே. வளைகள் எலிகளுக்கானவை என்ற சிறுகதையின் முடிவில் சில மராட்டிச் சொற்களுக்கே, தமிழ் சரித்திரம் கொடுத்துள்ளதைப் போல, வேறு சில சிறுகதைகளுக்கும் தேவை. (நாஞ்சில் நாட்டு வட்டாட்சி சொற்கள்). இசையை மையமாக வைத்தும், கணித எண்களை மையப்படுத்தியும் எழுதியுள்ள கதைகள், மாஸ்டர் பீஸ் என்றே சொல்ல வேண்டும். இவரது கும்ப முனி கற்பனை கதாபாத்திரம், புதுமைப் பித்தனுக்கு இணையான சிறுகதை எழுத்தாளர் என்று பாராட்டை பெறுகிறது. கிளாசிக் வரிசை என்பது நூற்றுக்கு நூறு இந்தச் சிறுகதைத் தொகுப்பிற்கு பொருந்தும். மகிழ்வூட்டும் வாசிப்பு அனுபவம். -ஜனகன். நன்றி: தினமலர், 22/9/2013.  

—-

 

மோடியின் குஜராத்-இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி, சரவணன் தங்கத்துரை, கிழக்கு பதிப்பக வெளியீடு, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-699-5.html

நரேந்திர மோடி குஜராத்தில் அப்படி என்னதான் செய்திருக்கிறார்? மற்ற மாநிலங்களைப் போலவே குஜராத்திலும் மின்சாரத் திருட்டு, மின்கட்டண பாக்கி போன்றவை நடைமுறையில் இருந்தன. இதற்காகத் தனியாகக் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஓய்வு பெற்ற ராணுவ சீரர்கள் 500பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான திருட்டு இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டன. நர்மதை நதியை 17 வறண்ட ஆறுகளுடன் இணைத்து அவை அனைத்தையும் ஜீவ நதி ஆக்கியுள்ளார். இவற்றின் மூலம் பொட்டல் காடான 7 மாவட்டங்கள் செழிப்படைந்துள்ளன. 332 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாயம் விசாலமாகியுள்ளது. உலகின் தொடர்புமொழியான ஆங்கிலத்தின் அவசியத்தைப் புரிந்து கொண்ட மோடி, இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து குஜராத்தின் சந்து பொந்துகளில் எல்லாம், இளைஞர்களுக்கு ஆங்கில பயிற்சி அளித்தார். இதன்மூலம் கிராமத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு எளிதாகியது. அங்கு ஒவ்வொரு மாதமும் நான்காவது வியாழக்கிழமை, காலை 9 மணி முதல் 12 மணி வரை குறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். புகாருக்கான தீர்வுகள் முடிந்தவரை அன்றைய தினமே தீர்வு காணப்படுகிறது. இப்படியாக தொலை நோக்குப் பார்வை, நேர்மை, செய்நேர்த்தி என திட்டமிட்டுச் செயல்பட்டதன் மூலம் குஜராத்தை ஒளிரச் செய்திருக்கிறார் என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது. -மகாதேவன். நன்றி: புத்தக அலமாரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *