தேவி பாகவதம்
தேவி பாகவதம், குருபிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ.
புராணங்களில் இருந்தும், இதிகாசங்களில் இருந்தும், சுவையான சம்பவங்களை தொகுத்துக் கொடுத்துள்ளார் ஆசிரியர் குருபிரியா. மகாவிஷ்ணுவுக்கு மகாலட்சுமி அளித்த சாபம், புதன் யாருடைய மகன், வியாசர் தோற்றம், பீஷ்மரின் சபதம், பாண்டவர் வரலாறு, கிருஷ்ணாவதாரம் உள்பட 35 நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
—-
நான்+நான்=நாம், வந்தனா அலமேலு, நக்கீரன், 105, ஜானிஜான்கான் ரோடு, சென்னை 14, விலை 60ரூ.
ஆண், பெண் பழகும்போது ஏற்படும் பிரச்சினைகளையும், அதில் இருந்து விடுபடும் வழிகளும் கூறப்பட்டுள்ளன. உண்மை சம்பவங்களை எடுத்துக்காட்டியிருப்பது பாராட்டத்தக்கது.
—-
திருப்பாவை நாச்சியார் திருமொழி, முனைவர் கு,வெ.பாலசுப்பிரமணியன், திருப்பாவை விலை 40ரூ, நாச்சியார் திருமொழி விலை 50ரூ, மீனாட்சி புத்தகாலயம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை 625001.
ஆண்டாள் அருளிய திருப்பாவை, நாச்சியார் திருமொழிக்கு எளிய தமிழில் உரை எழுதியிருக்கிறார்.
—-
அரண்மனைப்புறா, தஞ்சை ஜெயம், ஆதி பதிப்பகம், 73, காவிரி தெரு, யாகப்பாநகர், தஞ்சாவூர் 613007, விலை 70ரூ.
சமுகம் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை இணைத்து புனையப்பட்ட நாவல். விறுவிறுப்பான நடை. நன்றி: தினத்தந்தி, 27 பிப்ரவரி 2013.