மாலிக் காபூர்
மாலிக் காபூர், செ. திவான், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-020-8.html
டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் அடிமை அரசன்தான் மாலிக் காபூர். கொடூரனாக, தென்னாட்டைக் கொள்ளையடித்தவனாக வரலாற்று ஆசிரியர்கள் பலர் எழுதியுள்ளனர். மாலிக்காபூரை மாறுபட்ட கோணத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார் வரலாற்று ஆராய்ச்சியாளர் செ. திவான். மாலிக்காபூரின் போர் திறனையும் ஆட்சித் திறனையும், பல்வேறு அரசியல் சதிகளில் இருந்து மீண்டு வந்ததையும், பல்வேறு ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி விவரிக்கிறார். தன்னுடைய படைகள் நடத்திய கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தியதாகவும் கூறுகிறார். பாண்டிய மன்னர் பக்கம் இருந்து மாலிக்காபூரை எதிர்த்துப் போரிட்டவர்கள் 20 ஆயிரம் முஸ்லிம்கள் என்ற தகவலையும் தருகிறார். சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
—-
தியாகி பகத்சிங், ஆதனூர் சோழன், ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 45ரூ.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் செல்வாக்கு பெற்ற தியாகி பகத்சிங் தனது 12வது வயதிலே ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த களத்திற்கு சென்ற துணிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. சிறு வயது முதலே பகத்சிங் ஈடுபட்ட புரட்சிகள் ஒவ்வொன்றையும் ஆசிரியர் மிக அழகாக விளக்கியுள்ளார். தூக்கிலிடும்போது கூட புரட்சியாளர் லெனின் எழுதிய புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த பகத்சிங் உண்மையிலே ஒரு பெரிய புரட்சியாளர்தான் என்பதை ஆசிரியர் ஆதனூர் சோழன் தெளிவுபடுத்திய விதம் சிறப்பு.
—-
போரன்ஸிக் கதைகள், அய்யா நிலையம், 1603, ஆரோக்கிய நகர், 5ம் தெரு, ஈ.பி. காலனி, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613606, விலை 80ரூ.
ரகசியங்களால் சூழப்பட்ட குற்ற நிகழ்வுகளையும் பின்னர் அந்த வழக்குகளில் மர்ம முடிச்சுகள் எவ்வாறு அவிழ்க்கப்பட்டன என்பதையும், கதைகளாக ஆக்கிகொடுத்து இருக்கிறார் ஆசிரியர் டாக்டர் ஐ. சிவசுப்பிரமணிய ஜெயசேகர். இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ரசாயனங்கள் பற்றிய விவரங்களை, ஒவ்வொரு கதையுடனும் பின் இணைப்பாக கொடுத்து இருப்பது, கதையை படிப்பதற்கு சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறது. 14 சிறுகதைகளும் அத்துடன் உள்ள குறுநாவலும் படிக்க விறுவிறுப்பாக உள்ளன. நன்றி: தினத்தந்தி, 27 பிப்ரவரி 2013,