தேர்வு பயம் தேவை இல்லை

தேர்வு பயம் தேவை இல்லை, ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குக்கூட, தேர்வு என்றாலே சற்று பயம் ஏற்படும். பரீட்சை நெருங்கும்போது, பதற்றத்துடன் இருப்பார்கள். அத்தகைய அச்சம் தேவை இல்லை என்கிறார் நூலாசிரியர் குன்றில் குமார். தேர்வுக்கு மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும், முக்கியமான தகவல்களை மனதில் பதிய வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாகவும், விவரமாகவும் கூறுகிறார். மாணவ – மாணவிகளுக்கு பயன்படக்கூடிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

வெட்கம் விட்டுப் பேசலாம்

வெட்கம் விட்டுப் பேசலாம், சி. சரவண கார்த்திகேயன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 145ரூ. ஆபாசம் என்ற லேபிள் ஒட்டப்படும் விஷயங்கள் மற்றும் அவற்றின் வரைமுறைகள், காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன என்ற முன்னுரையோடு ஆசிரியர், படிப்பவர்களை சுவர்ந்திழுக்கிறார். ப்ரா, காண்டம், சானிடரி நாப்கின் முதல் பால்வினை நோய்கள், மலட்டுத் தன்மை வரை, 22 தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் தந்திருக்கிறார். சோவியத் யூனியன் காலத்தில், சிறையிலிருந்த கைதிகளுக்கு, ரகசியமாக சாராயம் எடுத்துச் செல்ல, காண்டம் பயன்பட்டிருக்கிறது. ஒரு சராசரி சைஸ் காண்டத்தில், 3.79 […]

Read more

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 135ரூ. பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு வார இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இதில் 25 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல்களுக்கு வடிகால் இல்லாமல் பெரும்பாலோர் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களது உணர்வுகளுக்கு வடிகாலாக, யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கதையோடு ஒன்றச் செய்யும்வகையில், சுவாரஸ்யமான சம்பவங்களுடன் விறுவிறுப்பான நடையில் சிறுகதைகளை படைத்திருக்கிறார் நூலாசிரியர் தமிழ்மகன். நன்றி: தினத்தந்தி, 28/1/2015.   —- ஸ்புட்னிக் முதல் மங்கள்யான்வரை, ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், […]

Read more

மாலிக் காபூர்

மாலிக் காபூர், செ. திவான், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-020-8.html டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் அடிமை அரசன்தான் மாலிக் காபூர். கொடூரனாக, தென்னாட்டைக் கொள்ளையடித்தவனாக வரலாற்று ஆசிரியர்கள் பலர் எழுதியுள்ளனர். மாலிக்காபூரை மாறுபட்ட கோணத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார் வரலாற்று ஆராய்ச்சியாளர் செ. திவான். மாலிக்காபூரின் போர் திறனையும் ஆட்சித் திறனையும், பல்வேறு அரசியல் சதிகளில் இருந்து மீண்டு வந்ததையும், பல்வேறு ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி விவரிக்கிறார். தன்னுடைய […]

Read more