தேர்வு பயம் தேவை இல்லை
தேர்வு பயம் தேவை இல்லை, ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ.
நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குக்கூட, தேர்வு என்றாலே சற்று பயம் ஏற்படும். பரீட்சை நெருங்கும்போது, பதற்றத்துடன் இருப்பார்கள். அத்தகைய அச்சம் தேவை இல்லை என்கிறார் நூலாசிரியர் குன்றில் குமார். தேர்வுக்கு மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும், முக்கியமான தகவல்களை மனதில் பதிய வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாகவும், விவரமாகவும் கூறுகிறார். மாணவ – மாணவிகளுக்கு பயன்படக்கூடிய புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 1/3/2017.