வெட்கம் விட்டுப் பேசலாம்

வெட்கம் விட்டுப் பேசலாம், சி. சரவண கார்த்திகேயன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 145ரூ.

ஆபாசம் என்ற லேபிள் ஒட்டப்படும் விஷயங்கள் மற்றும் அவற்றின் வரைமுறைகள், காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன என்ற முன்னுரையோடு ஆசிரியர், படிப்பவர்களை சுவர்ந்திழுக்கிறார். ப்ரா, காண்டம், சானிடரி நாப்கின் முதல் பால்வினை நோய்கள், மலட்டுத் தன்மை வரை, 22 தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் தந்திருக்கிறார். சோவியத் யூனியன் காலத்தில், சிறையிலிருந்த கைதிகளுக்கு, ரகசியமாக சாராயம் எடுத்துச் செல்ல, காண்டம் பயன்பட்டிருக்கிறது. ஒரு சராசரி சைஸ் காண்டத்தில், 3.79 லிட்டர் நிரப்ப முடியும். எரோட்டிக்கா, தன் கலை தன்மையை இழந்து, போர்னோகிராபியாக மாறியது உட்பட பல ஆச்சரியங்களை அள்ளி தருகிறது இந்த புத்தகம். இன்றைய காலகட்டத்தில் பொது இடத்தில் பேச கூச்சப்படும் விஷயங்களை, அவற்றின் வரலாற்றோடு விவரிக்கிறார் ஆசிரியர் அறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொள்ளலாம். -சி. கலாதம்பி. நன்றி: தினமலர், 31/5/2015.  

—-

நலம் தரும் யோகா, நித்யா சாமிக்கண்ணு, ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 70ரூ.

உடலையும், மனதையும் ஒருங்கே காக்க யோகக்கலையையும், அதன் பயன்களையும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சிப் படங்களோடு விளக்கப்பட்டிருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 3/6/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *