ஆப்பிளுக்கு முன்

ஆப்பிளுக்கு முன், சி.சரவண கார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், விலை 170ரூ. ஏவாளான காந்தியின் கதை கதை வடிவில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று. காந்தி குறித்த மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனையும் மோதிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த மோதல் மதிப்பீடுகளுக்குப் புதிய உருவம் அளிக்கின்றன. அவற்றைக் கூர்ப்படுத்துகின்றன. இவ்விளையாட்டில் வெற்றிபெற்றிருக்கிறது ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல். இந்நாவல் காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனையைக் களமாகக் கொண்டிருக்கிறது. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காமமே காரணமாகிறது. காமத்தை வெல்லும் ஒருவன் பெண்ணாக மாறுகிறான். அம்மாற்றம் சமூகத்தில் நிலவும் பால்பேதத்தையும் அதனால் எழும் வன்முறையையும் […]

Read more

வெட்கம் விட்டுப் பேசலாம்

வெட்கம் விட்டுப் பேசலாம், சி. சரவண கார்த்திகேயன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 145ரூ. ஆபாசம் என்ற லேபிள் ஒட்டப்படும் விஷயங்கள் மற்றும் அவற்றின் வரைமுறைகள், காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன என்ற முன்னுரையோடு ஆசிரியர், படிப்பவர்களை சுவர்ந்திழுக்கிறார். ப்ரா, காண்டம், சானிடரி நாப்கின் முதல் பால்வினை நோய்கள், மலட்டுத் தன்மை வரை, 22 தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் தந்திருக்கிறார். சோவியத் யூனியன் காலத்தில், சிறையிலிருந்த கைதிகளுக்கு, ரகசியமாக சாராயம் எடுத்துச் செல்ல, காண்டம் பயன்பட்டிருக்கிறது. ஒரு சராசரி சைஸ் காண்டத்தில், 3.79 […]

Read more

காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம்

காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம், முருகு பாலமுருகன், ராம் பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 50ரூ. உலகில் ஒப்பற்ற செல்வம், உடல் ஆரோக்கியம்தான். நம்மில் தினம் தினம் ஏதாவது நோய் நொடியால் அவதிப்படுவோர், அவ்வப்போது, சிறு ஆரோக்கிய பாதிப்புகள் வந்து குணமாவோர், எப்போதுமே பெரும் பாதிப்பு ஏதுமின்றி நல்ல ஆரோக்கியமாகவே வாழ்வோர்கள் உண்டு. முற்பிறவியில் அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, கிரக அமைப்புகளும், கிரக அமைப்புகளுSககு ஏற்ப நோய்களும் உண்டாகின்றன என்பது தான் இதற்கு காரணம். ஜனன ஜாதகத்தில், லக்னத்திற்கு […]

Read more