காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம்

காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம், முருகு பாலமுருகன், ராம் பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 50ரூ.

உலகில் ஒப்பற்ற செல்வம், உடல் ஆரோக்கியம்தான். நம்மில் தினம் தினம் ஏதாவது நோய் நொடியால் அவதிப்படுவோர், அவ்வப்போது, சிறு ஆரோக்கிய பாதிப்புகள் வந்து குணமாவோர், எப்போதுமே பெரும் பாதிப்பு ஏதுமின்றி நல்ல ஆரோக்கியமாகவே வாழ்வோர்கள் உண்டு. முற்பிறவியில் அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, கிரக அமைப்புகளும், கிரக அமைப்புகளுSககு ஏற்ப நோய்களும் உண்டாகின்றன என்பது தான் இதற்கு காரணம். ஜனன ஜாதகத்தில், லக்னத்திற்கு 6ம் வீடு ருண, சோக ஸ்தானம். இது நோய், தேக ஆரோக்கியம் ஆகியவற்றை அறிய உதவும் ஸ்தானம். இதில் அமையும் கிரகங்கள், இந்த இடத்தை பார்வையிடும் கிரகங்கள் ஆகியவற்றை கொண்டு, எந்த நோயால் ஜாதகருக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு என்பதை கணிக்கலாம். அந்த நோய் வரும் காலகட்டத்தையும் அறிந்துகொள்ளலாம். அந்தந்த நோய்களுக்குரிய, தெய்வ பரிகாரங்களை மேற்கொள்வதன்மூலம், பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்பித்து கொள்ளலாம். -மயிலை சிவா. நன்றி: தினமலர், 31/5/2015.  

—–

வெட்கம் விட்டுப் பேசலாம், சி. சரவண கார்த்திகேயன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 145ரூ.

சில விஷயங்களைப் பொது வெளியில் மட்டுமல்ல படுக்கையறையில் பேசுவதற்குக்கூடத் தயங்குகிறோம். அந்தத் தயக்கத்தை எல்லாம் தகர்த்தெறியும் இந்தப் புத்தகம் அந்றாட வாழ்க்கையில் நமக்குப் புரியாத விஷயங்கள் பற்றிப் புதிய வெளிச்சத்தைக் கொடுக்கிறது. நன்றி: தினத்தந்தி, 3/6/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *