மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 135ரூ.

பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு வார இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இதில் 25 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல்களுக்கு வடிகால் இல்லாமல் பெரும்பாலோர் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களது உணர்வுகளுக்கு வடிகாலாக, யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கதையோடு ஒன்றச் செய்யும்வகையில், சுவாரஸ்யமான சம்பவங்களுடன் விறுவிறுப்பான நடையில் சிறுகதைகளை படைத்திருக்கிறார் நூலாசிரியர் தமிழ்மகன். நன்றி: தினத்தந்தி, 28/1/2015.  

—-

ஸ்புட்னிக் முதல் மங்கள்யான்வரை, ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 125ரூ.

1957 அக்டோபர் 4ந்தேதி பூமியைச் சுற்றி செயற்கைச் சந்திரம் (ஸ்புட்னிக்) பறந்தது. அன்றைய சோவியத் தஷியா இந்தச் சாதனையை நிகழ்த்தியது. பிறகு படிப்படியாக ஆராய்ச்சிகள் நிகழ்ந்தன. 1969 ஜுலை 16ந்தேதி அமெரிக்க வானவெளி வீரர் ஆம்ஸ்டிராங், சந்திரனில் நடந்தார். இதன் பிறகும் பல வீரர்கள் சந்திரனுக்குப் போய் வந்தனர். இதுபற்றி எல்லாம் சுவைபட இந்நூலில் விவரிக்கிறார், ஆதனூர் சோழன். விண்வெளி ஆராய்ச்சி பற்றி முழுமையான தகவல்களைக் கூறும் நூல் இது. நன்றி: தினத்தந்தி, 28/1/2015,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *