மருந்தில்லா மருத்துவம்
மருந்தில்லா மருத்துவம், டாக்டர் பி.எஸ். லலிதா, மயிலை முத்துக்கள் வெளியீடு, சென்னை, விலை 150ரூ.
டாக்டர் பி.எஸ். லலிதா கால்நடை மருத்துவத் துறைப் பேராசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின் மருந்தில்லா மருத்துவம் என்ற சிகிச்சை முறையில் நோய்களை எளிதாக குணப்படுத்த முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார். ரெய்கி, அக்குபஞ்சர், அக்குபிரஷர் ஆகிய சிகிச்சை முறைகளைக் கடைப்பிடித்து சிகிச்சை அளிப்பவர் இவர். சர்வதேச அளவில் புகழ்பெற்றவரான இவர் எழுதியிருக்கும் இந்நூல் மருந்தில்லா மருத்துவம். ரெய்கி சிகிச்சையின் அடிப்படை அம்சங்களை இந்நூலில் விளக்குகிறார். அத்துடன் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் பிரச்னைகளை அறிவியல், உடற்கூறு ரீதியில் விளக்குவதோடு அவர்களுக்கு ரெய்கி முறையில் எவ்வாறு குணப்படுத்தினேன் என்பதையும் விரிவாகக் கூறுகின்றார். உடலில் இருக்கும் சக்கரங்கள், தியான முறைகள், ஆகிய பல விஷயங்களையும் விளக்கும் இந்நூல் எளிய தமிழில் எழுதப்பட்டிருப்பது சிறப்பு. நன்றி: அந்திமழை, 1/2/2015.
—-
உள்ளத்திறப்பு, பெரணமல்லுர் சேகரன், பெரணமல்லூர், விலை 100ரூ.
வடிகால் இல்லாமல் பெரும்பாலோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வடிகாலாக சிறுகதை வடிவத்தை எடுத்துக்கொண்டு சமூகத்தின் போலிகளை அடையாளம் காட்டுகிறது இச்சிறுகதைகளின் தொகுப்பு நூல். நன்றி: 2/2/2015.