அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ.
அரசியல், வரலாறு, சமூகம், கலை, இலக்கியம் அனைத்திலும் அறிஞர் அண்ணாவின் உரை முழக்கத்தைக் கேட்டு மக்கள் போற்றினர், புகழ்ந்தனர், வியந்தனர், பாராட்டினர். தனக்கு சரியென்று தோன்றுவதைக் கூறவோ, எழுதவோ தந்தை பெரியார் எப்போதும் தயங்கியதில்லை.மூதறிஞர் ராஜாஜி சுயமான சிந்தனையாளர். இந்த மூவரும் உதிர்த்த முத்துக்களை ஒருங்கே தொகுத்து ஒரு கருத்துக் களஞ்சியமாக தொகுத்தளித்திருக்கிறார் பி.எல். முத்தையா. நன்றி: தினத்தந்தி, 28/1/2015.
—-
விநய பத்திரிகா, முனைவர் மா. கோவிந்தராசன், வானதி பதிப்பகம், சென்னை, வலை 250ரூ.
இப்புத்தகம் ஒரு பக்தி காவியம். இதில் காணப்படும் பாடல்கள் அனைத்தும் தனிப்பாடல்கள். இதனை இயற்றிய துளசிதாசர் இந்தி இலக்கியத்தில் பக்தி காவியங்களுக்கு பெயர் பெற்றவர். இந்தியில் எழுதப்பட்ட இவரது இராமசரிதமானஸ் எனப்படும் துளசி இராமாயணம் மிகவும் புகழ் பெற்றது. விநய பத்திரிகா துளசிதாசரால் இறுதியாக எழுதப்பட்ட நூல் என்று கூறப்படுகிறது. இதில் 279 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலிலும் துளசிதாசர் பகவான் ராமனின் பெருமைகளையும், உதாரண குணத்தையும், மகிமைகளையும் விளக்கிக் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 28/1/2015,