வினைகள் அகற்றும் விசேஷ தலங்கள்

வினைகள் அகற்றும் விசேஷ தலங்கள், எடையூர் சிவமதி, வானவில் புத்தகாலயம், சென்னை, பக். 304, விலை 222ரூ. புகழ்பெற்ற திருக்கோயில்கள் பற்றி அவற்றின் தொன்மை, ஆன்மிகச் சிறப்பு, வரலாறு, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆன்மிகக் களஞ்சியமாக அமைந்துள்ளது இந்த நூல். சித்தர்களின் ராஜ்யமான சதுரகிரி மலையின் தெய்வங்கள், கல்விக் கடவுளான கூத்தனூர் சரஸ்வதி ஆலய தரிசனம், துவாரகையில் உள்ள கிருஷ்ணன் கோயில், பேட் துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் தம் மனைவியரோடு வசித்த வீடுகள் பற்றிய செய்திகள் அபூர்வமானவை. அமெரிக்கா, பிட்ஸ்பெர்க் நகரில் அமைந்துள்ள […]

Read more

பண்பாட்டை வளர்க்கும் அறிஞர்களின் வாழ்க்கை

பண்பாட்டை வளர்க்கும் அறிஞர்களின் வாழ்க்கை, எடையூர் சிவமதி, வின்வின் புக்ஸ், சென்னை, விலை 50ரூ. புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையில், எத்தனையோ சுவையான சம்பவங்கள் நடைபெற்றிருக்கும். அவை படிப்போரின் சிந்தனைக்கு விருந்தளிக்கலாம். வாழக்கைக்கு வழிகாட்டக்கூடியவையாகவும் இருக்கலாம். அத்தகைய சம்பவங்களை தொகுத்து வழங்கியுள்ளார் எடையூர் சிவமதி. மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல், காமராஜர், பாரதியார், பெரியார், அறிஞர் அண்ணா, பாரதிதாசன், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், கண்ணதாசன் உள்பட பலருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றைப் படிக்கலாம். ரசிக்கலாம். சிரிக்கலாம். சிந்திக்கலாம். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- […]

Read more

தரிசனம்

தரிசனம், குமுதம் பு(து)த்தகம், 308, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-1.html தரிசனம் என்ற பெயரை கேட்டவுடனேயே, ஏதோ இந்த நூலாசிரியரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்பு இறைபக்தி தொடர்பாக எழுதியிருப்பாரோ? என்ற எண்ணத்துடன் இந்த புத்தகத்தை திறக்கக்கூடாது. முழுமையாக கவிதை நடையில் இல்லாமல், அதே நேரத்தில், கவிதையின் சுவையை ஒரு உரைநடையில் ருசிக்கும்வகையில், கடவுளை காண்பது மட்டும் தரிசனம் அல்ல, உன்னையே நீ ஆழ்ந்து உணர்வதுதான் உண்மையான தரிசனம் […]

Read more

சுற்றுச்சூழல் சிந்தனைகள்

சுற்றுச்சூழல் சிந்தனைகள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், 19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-8.html சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரைகள் கொண்ட புத்தகம். மரங்களை வளர்க்க வேண்டிய அவசியம், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பிரச்சினைகள், முல்லைப் பெரியாறு விவகாரம்… இப்படிப் பல்வேறு விஷயங்களையும் அலசி ஆராய்கிறார் நூலாசிரியர் ஜே.ஜோபிரகாஷ். முக்கியமாக இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.   —-   விண்வெளியின் வியப்பூட்டும் செய்திகள், […]

Read more

சுவடிகள் வழங்கிய கவிதைகள்

சுவடிகள் வழங்கிய கவிதைகள், கோ. வேணுகோபாலன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 18, விலை 85ரூ. பண்டைய தமிழ் புலவர்கள் கவிஞர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பாக இந்த நூல் இருக்கிறது. பாடல்களுடன் இணைந்த கவிதைகளின் சொல்லாட்சி, இலக்கிய நயம் போன்றவை தமிழுக்கும் அதை படைத்தவர்களுக்கும் பெருமை சேர்ப்பதை நூல் முழுவதும் காண முடிகிறது. ஒவ்வொரு கவிதையுடனும் அது தோன்றிய சூழல் மற்றும் அதன் பொருள், கவிதையை ஆக்கியவர் பற்றிய குறிப்புகளை கொடுத்து இருப்பது சிறப்பு. பல நூல்களை வாங்கி படித்தபயனை […]

Read more