சுவடிகள் வழங்கிய கவிதைகள்
சுவடிகள் வழங்கிய கவிதைகள், கோ. வேணுகோபாலன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 18, விலை 85ரூ.
பண்டைய தமிழ் புலவர்கள் கவிஞர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பாக இந்த நூல் இருக்கிறது. பாடல்களுடன் இணைந்த கவிதைகளின் சொல்லாட்சி, இலக்கிய நயம் போன்றவை தமிழுக்கும் அதை படைத்தவர்களுக்கும் பெருமை சேர்ப்பதை நூல் முழுவதும் காண முடிகிறது. ஒவ்வொரு கவிதையுடனும் அது தோன்றிய சூழல் மற்றும் அதன் பொருள், கவிதையை ஆக்கியவர் பற்றிய குறிப்புகளை கொடுத்து இருப்பது சிறப்பு. பல நூல்களை வாங்கி படித்தபயனை தரும் வகையில் இதனை வடிவமைத்துள்ளார் நூலாசிரியர். நன்றி: தினத்தந்தி, 6 பிப்ரவரி 2013.
—–
குழந்தைகளுக்கான நட்சத்திரப் பெயர்கள், எடையூர். சிவமதி, சுரா பதிப்பகம், அண்ணா நகர், சென்னை 40, விலை 50ரூ.
குழந்தை பிறந்தவுடன் என்ன பெயர் வைக்கலாம் என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்துக்கொண்டு காத்திருப்போர் ஒருவகை. அதேநேரத்தில் குழந்தை பிறந்தபிறகு அதன் நட்சத்திரத்திற்கு ஏற்றாற்போல பெயர் தேடி அலைபவர்கள் இரண்டாம் வகை. இந்த இரண்டாம் வகையினருக்கான பெயர்கள் இந்நூலில் உள்ளன.
—–
பாம்பின் கண், சு. தியோடர் பாஸ்கரன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 190ரு. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-701-5.html
தமிழ் திரைத்துறை குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் பிரபலம் தியோடர் பாஸ்கரன். சினிமா ஒரு பாம்பின் கண்ணைப்போல வசீகரிக்கவும் செய்கிறது என்ற பெர்னார்ட்ஷாவின் சொற்றொடரிலிருந்து தலைப்பை எடுத்திருக்கிறார். மௌனப் படங்கள் தொடங்கி தமிழ் சினிமா வரைலாற்றை விளக்கும் நூல்.
—–
சேக்கிழாரின் 63 நாயன்மார்கள் புராணம், ச.கோபாலகிருஷ்ணன், சுரா பதிப்பகம், அண்ணா நகர், சென்னை 40, விலை 90ரூ.
அறுபத்து மூன்று நாயன்மார்கள், ஒன்பது தொகையடியார்களின் வரலாறை சேக்கிழார், 63 நாயன்மார் புராணம் என்ற பெயரில் தொகுத்திருக்கிறார். அதன் நவீன வடிவமே இந்நூல். இது தவிர சேக்கிழாரின் வரலாறு, 63 நாயன்மார்களின் நாடு, ஊர், குலம் ஆகிய விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நன்றி: இந்தியா டுடே, 19, டிசம்பர் 2012.