தரிசனம்

தரிசனம், குமுதம் பு(து)த்தகம், 308, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-1.html

தரிசனம் என்ற பெயரை கேட்டவுடனேயே, ஏதோ இந்த நூலாசிரியரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்பு இறைபக்தி தொடர்பாக எழுதியிருப்பாரோ? என்ற எண்ணத்துடன் இந்த புத்தகத்தை திறக்கக்கூடாது. முழுமையாக கவிதை நடையில் இல்லாமல், அதே நேரத்தில், கவிதையின் சுவையை ஒரு உரைநடையில் ருசிக்கும்வகையில், கடவுளை காண்பது மட்டும் தரிசனம் அல்ல, உன்னையே நீ ஆழ்ந்து உணர்வதுதான் உண்மையான தரிசனம் என்று படிப்பவர்களுக்கு உணர்த்தும்வகையில் எழுதப்பட்டுள்ள மிக அற்புதமான கருத்துக்களைக் கொண்ட நூல் இது. முப்பது தலைப்புகளில் ஒவ்வொரு மனிதனும் அவனுடைய ஒவ்வொரு செயலிலும் எப்படி அவன் ஆழ் மனதுக்குள் புகுந்து அவனை உணர்ந்து கொள்ளமுடியும் என்பதை விளக்கும்வகையில் ஒவ்வொரு அத்தியாயமும் எழுதப்பட்டுள்ளது. படிக்கும் ஒவ்வொருவரும் என்னில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? இதை யாரும் இவ்வளவு நாளும் என்னிடம் சொல்லவே இல்லையே, எனக்கு தெரியாதே என்று வியப்படைவார்கள்.  

—-

 

நீங்களும் கற்கலாம் தையற்கலை, மெட்ரோ டி.கே. இராமசாமி, வெளியீட்டாளர்-கங்காராணி பதிப்பகம், 3/373 தொல்காப்பியர் தெரு, சண்முகநாகர், பொழிச்சலூர், சென்னை 74, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-627-7.html

தையல் எந்திரத்தின் பாகங்கள், இயங்கும் முறை, பாதுகாக்கும் விதம் குறித்த விளக்கங்களுடன் தொடங்கி, ஆண் பெண் உடல் அமைப்புக்கு தகுந்தவாறு உடை தைக்கும் முறைகள் தொழில் நுட்பத்துடன் விளக்கப்பட்டுள்ளது.  

—-

 

உங்களுக்கான பொது அறிவுச் செய்திகள், எடையூர் சிவமதி, ஆப்பிள் புக்ஸ், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமிஞ்சிக்கரை, சென்னை 29, விலை 50ரூ.

மாணவ மாணவிகளுக்குத் தேவையான பொது அறிவுச் செய்திகள் அடங்கிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 18/9/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *