பண்பாட்டை வளர்க்கும் அறிஞர்களின் வாழ்க்கை
பண்பாட்டை வளர்க்கும் அறிஞர்களின் வாழ்க்கை, எடையூர் சிவமதி, வின்வின் புக்ஸ், சென்னை, விலை 50ரூ.
புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையில், எத்தனையோ சுவையான சம்பவங்கள் நடைபெற்றிருக்கும். அவை படிப்போரின் சிந்தனைக்கு விருந்தளிக்கலாம். வாழக்கைக்கு வழிகாட்டக்கூடியவையாகவும் இருக்கலாம். அத்தகைய சம்பவங்களை தொகுத்து வழங்கியுள்ளார் எடையூர் சிவமதி. மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல், காமராஜர், பாரதியார், பெரியார், அறிஞர் அண்ணா, பாரதிதாசன், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், கண்ணதாசன் உள்பட பலருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றைப் படிக்கலாம். ரசிக்கலாம். சிரிக்கலாம். சிந்திக்கலாம். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.
—-
உருதுக் கவிஞர் கவிக்குயில் காலிப்பின் கவிதைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 95ரூ.
கவிஞர் மிஸ்ரா காலிப், உருது இலக்கிய கவிச்சுடர், உருது மக்களையல்லாது உலகமெங்கும் வாழும் இலக்கிய விரும்பிகளை எல்லாம் ஈர்த்த ஒரு தனித்துவ கவிஞர். மறைமுகமாக நுட்பங்களை எடுத்துரைத்தல், கற்பனை வளம் நிரம்பியிருத்தல் இவையெல்லாம் காலிப் கவிதையில் காணக்கிடைக்கும் சிறப்புகள். இந்த அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் 100 இரண்டடி பாடல்களுக்கு மட்டும் தமிழில் மொழிமாற்றம் செய்து விளக்கம் தந்து படைத்துள்ளார் தி.ரா. சீனிவாசரங்கன். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.