குடி விடு
குடி விடு, ப. மோகன்தாஸ், வெளிச்சம் பதிப்பகம், மதுரை, விலை 50ரூ.
மதுவை மறந்து மனைவி மக்களை காப்பதற்கு தன்னிலை உணரவேண்டும் என்பதை மையமாக வைத்து குடியின் கொடுமையை படத்துடன் விளக்கப்பட்டுள்ள நூலாகும். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.
—-
நான் சொல்வது பொய்யாகுமோ?, ஜனார்த்தனன், மணிமேகலை பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
சிறுகதைகளுக்கு பக்க வரம்பு கிடையாது. இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் சின்னச்சின்ன கதைகள். ஆயினும் நச் என்று இருக்கின்றன. மனதைத் தொடுகின்றன. நன்றி:தினத்தந்தி, 7/5/2014.
—-
காவிரி ஏன் தோற்றோம்? எப்போது வெல்வோம்?, பெ. மணியரசன், பன்மை வெளியீடு, சென்னை, விலை 20ரூ.
காவிரி நீர் பிரச்சினை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள உதவும் நூல். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.