ஏ.ஜி.கே. எனும் போராளி

ஏ.ஜி.கே. எனும் போராளி, தொகுப்பு: மு.சிவகுருநாதன், பன்மை வெளியீடு, விலை: ரூ.290 கீழத்தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்களைப் பண்ணையடிமைகளாக வைத்திருந்த நிலவுடையாளர்களுக்கு எதிராகப் போராடி, உழைக்கும் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தந்த முதன்மையான தலைவர்களில் ஒருவர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன்(1932-2016). பெரியாரியத்தையும் மார்க்ஸியத்தையும் தனது வழிகாட்டும் கொள்கைகளாக ஏற்றுக்கொண்டவர். இரண்டுக்கும் இடையில் இணக்கம் கண்ட முன்னோடி. திராவிட, மார்க்ஸிய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் வழியே மக்கள் போராட்டங்களை முன்னின்று ஒருங்கிணைத்தவர். கூடவே, தமிழ்த் தேசிய உணர்வையும் ஏற்றுக்கொண்டவர். 44 உயிர்களைக் குடித்த வெண்மணிக் கொடுமைக்குக் காரணம் கூலி உயர்வுப் போராட்டம் […]

Read more

தலைவணங்காத் தமிழ்த்தேசியப் போராளி அ.வடமலை

தலைவணங்காத் தமிழ்த்தேசியப் போராளி அ.வடமலை, இயக்குனர் வ.கவுதமன், பன்மை வெளியீடு, விலை 250ரூ. தமிழ் தேசியத்துக்காக வாழ்நாள் முழுவதும் அடக்கு முறைகளை சந்தித்து உண்மை தொண்டராக இருந்தவர் வடமலை. தலைவணங்காத் தமிழ்தேசியப் போராளியாக இருந்த, அவருடைய வரலாறு இன்றைய இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். அவர் பற்றி சான்றோர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைவரும் இதனை வாங்கி படிப்பதன் மூலம் வடமலை தமிழ்த்தேசியத்துக்காக ஆற்றிய பணிகளை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். அதனை நாமும் பின்பற்ற உதவிகரமாக இருக்கும். நன்றி: […]

Read more

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 200ரூ. உலக சரித்திரத்தில் பவுத்த நெறியை ஒளிரச் செய்த மிகப்பெரிய தமிழ் ஞானியான போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்களைக் கூறும் நூல். போதி தர்மர், தென்னிந்தியாவில் தமிழ் மண்ணில் தோன்றிய ஞானப் பேரொளி, சீன தேசத்தை ஆட்கொண்டது மட்டுமல்லாது, உலக முழுக்கத் தமது அருள் மணம் கமழச் செய்த பெருமை இவருடையது. ஜென் தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவ அறிவியல் என இவருடைய மனித நேயப் பணியின் எல்லை மிக விரிவானது. ஆசியாவின் […]

Read more

குடி விடு

குடி விடு, ப. மோகன்தாஸ், வெளிச்சம் பதிப்பகம், மதுரை, விலை 50ரூ. மதுவை மறந்து மனைவி மக்களை காப்பதற்கு தன்னிலை உணரவேண்டும் என்பதை மையமாக வைத்து குடியின் கொடுமையை படத்துடன் விளக்கப்பட்டுள்ள நூலாகும். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- நான் சொல்வது பொய்யாகுமோ?, ஜனார்த்தனன், மணிமேகலை பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. சிறுகதைகளுக்கு பக்க வரம்பு கிடையாது. இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் சின்னச்சின்ன கதைகள். ஆயினும் நச் என்று இருக்கின்றன. மனதைத் தொடுகின்றன. நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- காவிரி ஏன் தோற்றோம்? […]

Read more