ஏ.ஜி.கே. எனும் போராளி
ஏ.ஜி.கே. எனும் போராளி, தொகுப்பு: மு.சிவகுருநாதன், பன்மை வெளியீடு, விலை: ரூ.290 கீழத்தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்களைப் பண்ணையடிமைகளாக வைத்திருந்த நிலவுடையாளர்களுக்கு எதிராகப் போராடி, உழைக்கும் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தந்த முதன்மையான தலைவர்களில் ஒருவர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன்(1932-2016). பெரியாரியத்தையும் மார்க்ஸியத்தையும் தனது வழிகாட்டும் கொள்கைகளாக ஏற்றுக்கொண்டவர். இரண்டுக்கும் இடையில் இணக்கம் கண்ட முன்னோடி. திராவிட, மார்க்ஸிய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் வழியே மக்கள் போராட்டங்களை முன்னின்று ஒருங்கிணைத்தவர். கூடவே, தமிழ்த் தேசிய உணர்வையும் ஏற்றுக்கொண்டவர். 44 உயிர்களைக் குடித்த வெண்மணிக் கொடுமைக்குக் காரணம் கூலி உயர்வுப் போராட்டம் […]
Read more