ஆலமரம்

ஆலமரம், விஜயலஷ்மி சுந்தராஜன், மணிமேகலைப் பிரசுரம், பக். 958, விலை 490ரூ.

ஆலமரம் நீண்ட காலக்கட்டத்தை உள் அடக்கிய ஒரு உயர்ந்த நாவல். சுதந்திரப் போராட்ட காலம். இரண்டாம் உலகப் போர் எல்லாம் இந்தக் கதையில் உண்டு. கூட்டுக் குடும்ப உறவுகளும் அதன் சாதக பாதகங்களுமே முக்கியமாக இதில் இடம் பெறுகின்றன. அணைத்துக் கொண்டு போக வேண்டிய ஆலமரம் போன்ற குடும்பத் தலைவி, தன் மரத்தின் அடியில் புல் பூண்டு கூட முளைக்க விடாத சுய நலம் பிடித்த ஆலமரத்தைப்போல், தன் குடும்பத்துக்கு சொத்து சேர்க்கிறாள். தானும் அழிந்து, மற்றவர்களையும் அழிக்கிறாள். இதை இலக்கிய நயத்துடன் சொல்லிச் செல்கிறார் விஜயலஷ்மி சுந்தரராஜன். -எஸ். குரு. நன்றி: தினமலர், 11/5/2014.  

—-

சுதந்திரப் போராட்ட வீரர் அனந்த பத்மநாபன் நாடார், அ. நாராயணன் நாடார், ம. அந்தோணி நாடார், சா.வா.செல்வன்நாடார், நாடார் மக்கள் சக்தி, திருநெல்வேலி, விலை 20ரூ.

இந்திய வரலாற்றிலேயே நமது நாட்டை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியப் படையை எதிர்த்துப் போரிட்டு வெற்றிக்கொண்ட மாவீரன் பத்மநாபன் நாடார். இந்திய அரசர்கள் பானிபட், பிளாகி உள்ளிட்ட போர்களில் தோற்றபோது, இவர் அதனை மாற்றி சரித்திரம் படைத்தார். அவருடைய வரலாற்றை இளைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 7/5/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *