அரவாணிகள் அன்றும் இன்றும்
அரவாணிகள் அன்றும் இன்றும், முனைவர் கி. அய்யப்பன், விசாலாட்சி பதிப்பகம், கடையம் நல்லாப்பாளையம், விழுப்புரம் 605701, பக். 166, விலை 150ரூ.
அரவாணியரின் உணவு, உறவு, சடங்குகள், தொழில்கள் என அவர்களது வாழ்க்கையை நூலாசிரியர் ஆய்வு செய்து விளக்கியுள்ளார். அரவாணிகளது கல்விநிலை, பொருளாதார நிலை போன்றவை பற்றியும், அவர்களது குழுவுக்குள் பேசும் கவுடி மொழி குறித்தும் கூறப்பட்டுள்ளது. பெண்ணியநோக்கில் அரவாணியம், திருக்குறள், அகநானூறு, நீலகேசி போன்ற இலக்கியங்களில் அரவாணியம் என அரவாணிகள் நிலை அன்றும் இன்றும் பகுத்து விளக்கப்பட்டுள்ளது. அரவாணிகள் குறித்து அறிய இந்நூல் பெரிதும் உதவும். குறிப்பாக அரவாணிகள் குறித்த ஆய்வு போல இருப்பதால், இவர்களைப் பற்றிய விளக்கங்களை எளிதாக உணரலாம். ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம். -ஆரா.
—-
முல்லாவின் சிரிப்புக் கதைகள், லூர்து எஸ். ராஜ், ஸ்ரீவாரி வெளியூடு, பு. எண் 18, ப.எண் 66, அம்மையப்பன் தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 176, விலை 65ரூ.
இறக்கின்ற போதும் சிரித்துக்கொண்டே இறந்தவர் முல்லா என்று குறிப்பிடுவர். அவரது கதைகள் அரபு நாடுகளிலும், பிற நாடுகளிலும் சிரிப்புக்காகவும், சிந்தனைக்காகவும் போற்றப்படுகின்றன. அந்த முல்லாடிவன் சிரிப்புக் கதைகளில், முப்புத்து நான்கு கதைகளைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். -முகிலை ராசபாண்டியன்.
—-
பாட்டி சொன்ன கதைகள், த. சிரில் அலெக்சாண்டர், ஸ்டார்லிங் அபார்ட்மென்ட்ஸ், அக்பராபாத், 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, பக். 84, விலை 50ரூ.
குழந்தைகளுக்கான, பாரம்பரிய கதைகள் தொகுப்புநூல். 1. பலகாரமழை, 2. உழைப்பே உயர்வு, 3. சுமைதாங்கி, 4. பாட்டுபுலவன், 5. நாவடக்கம், 6. புகையிலை அரக்கன். இந்த தகவல் தொகுப்பு பிரதிகள் கிடைக்குமிடம், சென்டர் பார் சோஷின்ஸ், ஸ்டார்லிங் அபார்ட்மென்ட்ஸ், 39/8, அக்பராபாத் 2 வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24. நன்றி: தினமலர், 11/12/13.