திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், விலை 360ரூ. திருமந்திரத்தில் பல்வேறு நிலைகளில் தாவரங்கள் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன. மனித வாழ்க்கையும், இறைவழிபாட்டையும், யோக நிலையையும் தாவரங்களோடு இணைத்து திருமூலர் தனது திருமந்திரத்தில் 229 பாடல்களில் 86 தாவரங்களைப் பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தாவரங்களை அடையாளம் கண்டு, அத்தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிடுவதுடன், ஒவ்வொரு தாவரம் பற்றிய விளக்கம், வகைப்பாடு, தாவரம் இடம் பெற்ற பாடலடிகள், தாவரங்கள் பற்றிய வண்ண ஒளிப்படங்கள் ஆகியவை இந்நூலில் விரிவாகவும், விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன. நன்றி: […]

Read more

சமூக வரலாற்றில் அரவாணிகள்

சமூக வரலாற்றில் அரவாணிகள், முகிலை ராஜபாண்டியன், முனைவர் கே.ஆர். லட்சுமி, முனைவர் கி. அய்யப்பன், முனைவர் கெ.ரவி, சி.ராமச்சந்திரன், விசாலாட்சி பதிப்பகம், கிழக்குத் தெரு, கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம், விலை 300ரூ. அனுதினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அடையும் அவமானங்கள், சொந்த குடும்பமே புறந்தள்ளும் அவலம் என இதற்கு மேலும் தாங்காது கசப்பு என்கிற நிலையில்தான் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், பெரும்பாலான அரவாணிகள். இவர்களின் வாழ்க்கையில் சமூகத்தின் அக்கறை எத்தகையதாக இருக்க வேண்டம் என்பதை 58 ஆய்வாளர்களின் பார்வையில் தந்திருப்பதே இந்த நூல். […]

Read more

அரவாணிகள் அன்றும் இன்றும்

அரவாணிகள் அன்றும் இன்றும், முனைவர் கி. அய்யப்பன், விசாலாட்சி பதிப்பகம், கடையம் நல்லாப்பாளையம், விழுப்புரம் 605701, பக். 166, விலை 150ரூ. அரவாணியரின் உணவு, உறவு, சடங்குகள், தொழில்கள் என அவர்களது வாழ்க்கையை நூலாசிரியர் ஆய்வு செய்து விளக்கியுள்ளார். அரவாணிகளது கல்விநிலை, பொருளாதார நிலை போன்றவை பற்றியும், அவர்களது குழுவுக்குள் பேசும் கவுடி மொழி குறித்தும் கூறப்பட்டுள்ளது. பெண்ணியநோக்கில் அரவாணியம், திருக்குறள், அகநானூறு, நீலகேசி போன்ற இலக்கியங்களில் அரவாணியம் என அரவாணிகள் நிலை அன்றும் இன்றும் பகுத்து விளக்கப்பட்டுள்ளது. அரவாணிகள் குறித்து அறிய இந்நூல் […]

Read more

இந்தியாவில் ஓரினப்பால்

இந்தியாவில் ஓரினப்பால், முனைவர் கி. அய்யப்பன், விசாலாட்சி பதிப்பகம், பக். 128, விலை 100ரூ. ஓரினச் சேர்க்கையை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்நூலில் எழுதியிருக்கும் ஆசிரியரின் முயற்சி, மிகத் தெளிவானதுதான். நம்மில் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கை என்ற வார்த்தையை கேட்டாலே, முகம் சுளிப்பது உண்டு. ஓரினச் சேர்க்கையை பல மதங்களும் வன்மையாக கண்டிக்கவே செய்கின்றன. இந்தியாவில் 25 லட்சம் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியன் பீனல் கோர்ட் 377ன்படி, ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக் குரிய குற்றமாக இருந்தது. ஆனால் […]

Read more