சமூக வரலாற்றில் அரவாணிகள்
சமூக வரலாற்றில் அரவாணிகள், முகிலை ராஜபாண்டியன், முனைவர் கே.ஆர். லட்சுமி, முனைவர் கி. அய்யப்பன், முனைவர் கெ.ரவி, சி.ராமச்சந்திரன், விசாலாட்சி பதிப்பகம், கிழக்குத் தெரு, கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம், விலை 300ரூ.
அனுதினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அடையும் அவமானங்கள், சொந்த குடும்பமே புறந்தள்ளும் அவலம் என இதற்கு மேலும் தாங்காது கசப்பு என்கிற நிலையில்தான் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், பெரும்பாலான அரவாணிகள். இவர்களின் வாழ்க்கையில் சமூகத்தின் அக்கறை எத்தகையதாக இருக்க வேண்டம் என்பதை 58 ஆய்வாளர்களின் பார்வையில் தந்திருப்பதே இந்த நூல். இரட்டைக் காப்பியங்களில் அரவாணிகள் குறித்த பதிவுகள், பக்தி இலக்கியங்களில் அரவாணிகள் போன்ற படைப்புகள் அரவாணிகளின் கால கட்டத்தை பிரமிப்புடன் உணர வைப்பவை. மூன்றாம் பாலினமாக பிறந்துவிட்ட இவர்கள் தங்களைத் தெரிந்து கொள்ளும்வரை தான் பெற்றோர், உடன்பிறந்தோரின் பந்தபாசம் எல்லாம். அப்புறமாய் நிரந்தரமாய் அந்த பாசம் அடைப்பட்ட கதவாகி விடுகிறது. அப்புறமாய் பாலியல் தொழில், நடனம் என்று திரும்ப முடியாத ஒருவழிப்பாதையில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதை அரவாணிகளின் வாழ்க்கை அவலங்கள் கட்டுரை காட்சிப்படுத்துகிறது. அகமதாபாத்தில் உள்ள பவுத்ராஜ் மாத்தாராணி இவர்கள் குலதெய்வம் என்பதும், தமிழ்நாட்டில் கூவாகம் மாதிரியே இங்கும் அரவாணிகள் சென்று வழிபட்டு வருகிறார்கள் என்பதும் நூலின் தெய்வீக பக்கங்கள்.
—-
விஞ்ஞானத்தில் விளையாட்டு, ஆர். கிளாட்வின் கேபிரியேல், மீனாட்சி பிரசுரம், 661, ராமநாதன் நகர், பாலசமுத்திரம் ரோடு, பழனி 1, விலை 50ரூ.
83 அறிவியல் விளையாட்டுகள் உள்ளன. ஒவ்வொன்றும் செய்வது எப்படி? என்னென்ன தேவை? எப்படி செயல்படும்? என்ற தத்துவம் போன்ற விவரங்களும் உள்ளன.
—-
கலியுகத்தில் கல்யாணம், புதுக்கோட்டை கல்யாணராமன், சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-586-7.html
ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் முக்கிய கட்டத்தை எட்டச் செய்வது திருமணம். அந்த திருமணம் எதற்காக செய்யப்படுகிறது? திருமணத்தில் எத்தனை வகைகள் உள்ளன? ஜாதக பொருத்தம், திருமண தோஷம், அதற்கான பரிகாரம் என்று திருமணத்தையும், அதற்குண்டான அனைத்து விஷயங்களையும் இந்த நூலில் கூறியுள்ளார் நூல் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 20/11/13.