இறகுதிர் காலம்,

இறகுதிர் காலம், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு, 1447, அவினாசி சாலை, பீளமேடு, கோயம்புத்தூர் 641004.

இயற்கைச் சூழல் நிரம்பிய ஏரி, குளம், மலைகளின் இன்றைய நிலை என்ன? பறவையினங்கள், மற்ற உயிரினங்கள் எத்தகைய பாதிப்பை அடைந்திருக்கின்றன? விடை தேடுகிறது இந்நூல். நன்றி: இந்தியா டுடே, 11/12/13  

—-

 

மூத்தோர் சொல்லமிர்தமும் இளைஞர் நல்வாழ்வும், இரா. வைத்தியநாதன், நர்மதா பதிப்பகம், சென்னை 17, பட்க. 160, விலை 70ரூ.

இளைய தலைமுறைக்கு முன்னோர்களின் வாழ்வியல் அறிவுக் களஞ்சியத்தைத் தரவேண்டும் என்று நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ள நூல். மண்ணில் எவ்வாறு நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதை விளக்கும் நூல். நல்ல வாழ்க்கை என்றால் என்ன? அதற்கான நியதிகள் எவை? இளமையில் ஏன் கற்க வேண்டும்? பிறருடன் எவ்வாறு பழகுவது? ஆணவத்தை ஏன் ஒழிக்க வேண்டும்? ஒற்றுமை ஏன் அவசியம்? என நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான அனைத்து வழிகளையும், முறைகளையும் மிகவும் தெளிவாகச் சொல்கிறார் நூலாசிரியர். திருக்குறள், நாலடியார், பகவத்கீதை, ரிக்வேதம் உள்ளிட்ட பல அறிவார்ந்த நூல்களில் இருந்தும், விவேகானந்தர், பாரதிகளில் ஸ்ரீ சத்யசாயிபாபா, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜெபர்ஸன், ஹன்ரிக் இப்சன், ஆல்பர்ட், ஸ்வீட்ஸர், ஜான் ராக்பெல்லர், டி.எஸ்.எலியட் ஆகியோரின் சிறப்பான கருத்துகளையும் மிகப் பொருத்தமான முறையில் நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளவிதம் அருமை. பல நூல்களைக் கற்று அறிவுச் செல்வத்தைத் திரட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள், நிறைய நூல்களைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. இந்நூல் ஒன்றைப் படித்தால் போதும் என்று துணிந்து சொல்லலாம். நன்றி: தினமணி, 2/12/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *