சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார்

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார், சுவாமி கமலாத்மனாந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 200ரூ.

இந்திய தேசிய ஒற்றுமை, மத நல்லிணக்கம், சமய சமரசம், பெண்களின் மேன்மை போன்றவற்றில் சுவாமி விவேகானந்தருக்கும் மகாகவி பாரதியாருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் பல மேற்கோள்களுடன் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.

விவேகானந்தர் பற்றி பாரதியார் எழுதிய பல கட்டுரைகளும், தமிழ் மொழிபெயர்ப்புடன் கூடிய அவரது ஆங்கில கட்டுரைகளும் இதில், இடம் பெற்றுள்ளன. விவேகானந்தர் பற்றி பல்வேறு பத்திரிகைகளில் பாரதியார் வெளியிட்ட 75 மேற்கோள்கள், பகவத் கீதை தமிழ் மொழிபெயர்ப்பில் அவர் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி போன்றவை அனைவரும் படித்து பயன்பெற வேண்டியது ஆகும்.

இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பல தொகுப்புகளின் ஊடே, 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சுவாரசியமான சரித்திர நிகழ்வுகளும் இடம் பெற்று இருப்பதால் படிக்க விறுவிறுப்பாக உள்ளது.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000026646.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

நன்றி: தினத்தந்தி, 21/3/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *